Rashmika Mandanna Exclusive : பேஷன் ஷோவில் எப்படி இருக்காங்கன்னு பாருங்க...
நடிகை ராஷ்மிகா மந்தனா Versace SS25 நிகழ்ச்சியில் ட்ரெண்டிங் உடையில் கலந்துக்கொண்டு தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ராஷ்மிகா மந்தனா
தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழி படங்களில் நடித்து பிரபல்யமான நடிகை தான் ராஷ்மிகா மந்தனா.
தனது கியூட் ரியாக்சன்களால் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் மனதையும் கவர்ந்த இவர் ரசிகர்களால் நேஷனல் கிரஷ் என அழைக்கப்படுகின்றார்.
தமிழில் சுல்தான், வாரிசு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர், தனது இயற்கை அழகால் அனைவரையும் கவர்ந்து வருவதுடன் குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘அனிமல்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது.
அடுத்து அவரின் நடிப்பில் 'புஷ்பா 2', 'ரெயின்போ' போன்ற படங்கள் தயாராகி வருகின்றன. சினிமாவில் மட்டுமன்றி தற்போது சமூக வளைத்தளங்களிலும் அதிக ஆர்வம்காட்டிவருகின்றார்.
இந்நிலையில் Versace SS25பெஷன் நிகழ்ச்சியில் குட்டை உடையில் கலந்துக்கொண்ட இவர் கலக்கல் போஸ் கொடுத்து வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை அள்ளிவருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |