இனப்பெருக்கத்திற்காக கடலை நோக்கி படையெடுக்கும் அரிய வகை நண்டுகள்!
அவுஸ்ரேலியாவிலுள்ள ஒரு தீவில் இனப்பெருக்க சேர்கைக்காக வரிசையாக செந்நிற நண்டுகள் செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடலை நோக்கி படையெடுத்த நண்டுகள்
அவுஸ்ரேலியாவிலுள்ள கிறிஸ்துமஸ் தீவில் இனப்பெருக்க சேர்கைக்காக வரிசையாக செந்நிற நண்டுகள் கடலை நோக்கி செல்கிறது.
இவை செல்லும் பாதையில் நண்டுகளுக்கு எந்தவிதமான இடையுறு ஏற்படாது பாதைகள் அமைக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் தூரத்திலிருந்து இந்த அணி வகுப்பை பார்வையிடும் வகையில் அவுஸ்ரேலிய அரசாங்கம் வடிவமைத்துள்ளது.
சிறப்பம்சம்
மேலும் இந்த நண்டுகளில் இனப்பெருக்க சேர்க்கை முடிந்ததும் ஆண் நண்டுகள் காட்டிற்கு திரும்பும், பெண் நண்டுகள் இலட்சக்கணக்கான முட்டைகளை கடலில் இட்டுவிட்டு சற்று தாமதமாக காட்டிற்குள் செல்கிறது. இந்த முட்டைகள் சில தொகை அங்குள்ள மீன்களுக்கு உணவாகி விடுகிறது.
இதில் மிகுதியாக இருப்பவையே நண்டாக மாறி மீண்டும் காட்டிற்கே செல்கிறது.தொடர்ந்து நண்டுகள் இனப்பெருக்க சேர்க்ககைக்கு செல்லும் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.