வியக்க வைக்கும் இரு தலை பாம்பு - தீயாய் பரவும் புகைப்படம்
விலங்குகளின் உலகம் மிகவும் சுவாரஸ்யமானது. சமூக ஊடகங்களில் இந்த அற்புதமான உயிரினங்களின் வேடிக்கையான வீடியோக்கள் வைரலாகின்றன.
காடுகளில் உள்ள விலங்குகளின் வீடியோக்கள் மற்றும் படங்கள் பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சிகரமானவை.
அவை சமூக ஊடகங்களில் அடிக்கடி வைரலாகின்றன. தென்னாப்பிரிக்காவின் காடுகளில் மிகவும் அரிதான மற்றும் இரு தலைகள் கொண்ட பாம்பின் புகைப்படம் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது.
பாம்புகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள நிக் எவன்ஸ் இரண்டு தலைகள் கொண்ட சதர்ண் பிரவுன் எக் ஈட்டர் பாம்பின் புகைப்படங்களை பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.
இந்த அரியவகை பாம்பை ஒருவர் தனது தோட்டத்தில் கண்டதாகவும், இதனை பிடிக்க தான் அழைக்கபட்டதாகவும் இவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தலைகளுடன் பிறக்கும் விலங்குகளுக்கு பாலிசெபாலி என்ற நிலை உள்ளது. இது பாலூட்டிகளை விட ஊர்வனவற்றில் மிகவும் பொதுவானது.