இமயமலையில் நடந்த அதிசயம்... ராட்சத மின்னல்களால் வண்ணமயமாகிய மலையில் அழகிய காட்சி
இமயமலையின் மீது ராட்சத மின்னல் ஒன்று தாக்கியதில் வண்ணமயமாக மாறிய மலையின் காட்சி தற்போது காணொளியாக வெளியாகியுள்ளது.
நாசா வெளியிட்ட அழகிய காட்சி
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா பிரபஞ்சத்தைப் பற்றிய பல ஆராய்ச்சிகளை செய்து வருவதுடன், புது புது உண்மைகளை தனது அதிநவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் வெளியிட்டும் வருகின்றது.
தற்போது சீனா, பூட்டான் நாடுகளை ஒட்டிய இயமலை பகுதியில் சிவப்பு மற்றும் பிங்க் நிற வண்ணங்களில் மின் விளக்கு அமைத்தது போன்று காட்சி வெளியாகியுள்ளது.
இந்த ஒளித்திரள்கள் வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் என்று தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம்.
அதாவது வானிலிருந்து விண்ணிற்கு வந்த மின்னல்கள் அலங்கரித்ததாகும். இதனை நாசா GIGANTIC JETS மூலம் படம்பிடித்துள்ளதுடன், இதனை காணொளியாகவும் வெளியிட்டுள்ளது.
இதுவரை இல்லாத வகையில் இந்த 21ம் நூற்றாண்டில் இந்த நிகழ்வு நடந்துள்ளதுடன், இடியுடன் மின்னல் அடிக்கும்போது பூமியின் அயோனோஸ்பியர் வளிமண்டல அடுக்குகளில் ஏற்படும் சூரிய கதிர்வீச்சுகளாலும், காஸ்மிக் கதிர்வீசுகளாலும் இந்த வண்ணக்குழப்புகள் ஏற்பட்டு வானில் ஒளிதிரளான மின்னல்களாக அவை இறங்கும் காட்சி உருவாகியுள்ளது என நாசா விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
#HAARP
— Pankaj Kumar Singh (@pksingh7230) June 24, 2024
Rare Beauty Unveiled: NASA Shares a Breathtaking Display of Gigantic Jets Soaring Over the Himalayaswe see large jets of lightning reaching upward from the storm clouds in the distance into Earth's ionosphere.18.06.2024 pic.twitter.com/sUBgnEFUir
குறித்த மலைப்பகுதியில் தொடர்ச்சியாக 4 ஒளித்திரள் ஜெட் மின்னல்கள் விழுந்த நிலையில், இதனை மிகவும் அழகாக மக்களுக்கு காட்சிப்படுத்தியுள்ளது நாசா.
சாதாரண மின்னலை விட குறித்த மின்னல் 50 மடங்கு அதிக சக்தியுடையதாகவும் உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |