வெறும் 2 ரூபாய் நாணயம் இருந்தால் லட்சாதிபதி ஆகலாம்: எப்படினு தெரியுமா?
கொரோனா காலத்தில் வீட்டில் இருந்த மாதிரியே பணம் சம்பாதிப்பதற்கு பல வழிமுறைகள் தற்போது வந்துள்ளது. இதில் ஒன்று தான் தன்னிடம் இருக்கும் அரியவகை நாணயங்களை லட்சங்களில் விற்று சம்பாதிப்பது.
ஆம் உங்களிடம் பழைய நாணயங்கள் இருந்தால் நீங்களும் லட்சாதிபதி ஆகலாம். எப்போதுமே அரிதான பழைய நாணயங்கள் ரூபாய் நோட்டுகளுக்கு நல்ல மதிப்பு உண்டு.
தற்போது குறிப்பிட்ட 2 ரூபாய் சிறப்பு நாணயம் உங்களிடம் இருந்தால், நீங்கள் ஒரு கோடீஸ்வரர் ஆக அதிக நேரம் ஆகாது. இந்த 2 ரூபாய் நாணயம் 1994 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது.
இந்த நாணயத்தின் பின்புறத்தில் இந்தியாவின் கொடி உள்ளது. குயிக்ர் (Quiker)இணையதளத்தில் இந்த அரிய நாணயங்களின் விலை ரூ .5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுதந்திரத்திற்கு முன், விக்டோரியா மகாராணியின் ஒரு ரூபாய் வெள்ளி நாணயம் 2 லட்சம் ரூபாய்க்கு விற்கலாம். அதேபோல், 1918 ஆம் ஆண்டின் ஜார்ஜ் பேரரசரின் ஒரு ரூபாய் பிரிட்டிஷ் நாணயம் ரூ .9 லட்சம் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நாணயங்கள் இ-காமர்ஸ் தளமான க்விக்கரில் விற்கப்படுகின்றன. பழைய இந்த நாணயங்களுக்கு தற்போது மதிப்பு அதிகமாகி வருவதால், எளிதில் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்.