ரஞ்சிதமே பாடலுக்கு அரை தூக்கத்திலிருந்து எழுந்து VIBE செய்த குழந்தை! திகைத்துப் போன நெட்டிசன்கள்
ரஞ்சிதமே பாடலுக்கு தூங்கிக் கொண்டிருந்த குழந்தை எழுந்து ஆடும் காட்சி இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
முன்னணியிலிருக்கும் மக்கள் தளபதி
தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகர் தான் விஜய். இவரின் நடிப்பிற்கும், எக்ஷனுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இவர் இந்தியா உட்பட பல நாடுகளில் ரசிகர்கள் இருக்கிறார்கள், இவரின் அமைதிக்கு பலர் அடிமை என ரசிகர்கள் அவ்வப்போது டுவிட் செய்வார்கள்.
இந்த நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கில் தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் “ வாரிசு” இந்த திரைப்படம் பொங்கல் தினத்தையோட்டி தான் திரைக்கு வந்தது.
வாரிசு திரைப்படம் 200 கோடி ரூபாய் வரை தன்னுடைய வசூல் வேட்டை நடத்திருந்தது. ஆனால் இந்த பாடல்கள் இன்றும் எமது வாய்களில் முனுமுனுக்கச் செய்கிறது.
அந்தளவு ரஞ்சிதமே பாடல் வைரலாக்கி பட்டிதொட்டியெங்கும் இன்று வரை ஒளித்துக் கொண்டிருக்கிறது.
குழந்தை குத்தாட்டம் போடும் காட்சி
இந்த நிலையில் சமிபத்தில் ரஞ்சிதமே பாடலுக்கு வயிற்றிலுள்ள குழந்தை உதைக்கும் காணோளி இணையத்தில் உலா வந்ததது. இதனை தொடர்ந்து சுமார் 1 வயது மதிக்கத்தக்க குழந்தையொன்று ரஞ்சிதமே பாடலுக்கு தூங்கிக் கொண்டிருக்கும் போது எழுந்து நின்று நடனம் ஆடும் காட்சி இணையவாசிகள் பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்த குழந்தை ஆடும் போதே தெரிகிறது செம்ம தூக்கத்தில் இருக்கிறது என்று, அதனை தெரிந்துக் கொண்ட வீட்டிலுள்ள உறவினர் ஒருவர் இந்த பாடலைப் போட்டு குழந்தையை எழுப்பியுள்ளார்.
இந்த வீடியோக்காட்சியை Chennai Paiyan என்பவர் தன்னுடை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்க்கும் போது குழந்தைக்கு ரஞ்சிதமே பாடல் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை அறிந்துக் கொள்ளலாம்.
??❤️❤️ Ranjithamey ?@MusicThaman @Lyricist_Vivek#varisu pic.twitter.com/CFaUWQ2Hnk
— Chennai Paiyan (@ChennaiPaiyanof) January 24, 2023