Ranitidine மாத்திரை பயன்படுத்துவது ஆபத்தானதா?
உடல்நிலை சரியில்லை என்றவுடன் முதலில் நாம் நாடுவது மருத்துவர்களை தான், நம்மை பரிசோதித்த மருத்துவர்கள் சில மருந்துகளை எழுதிக்கொடுப்பார்கள்.
அதை எப்படி சாப்பிட வேண்டும்? எந்நேரத்தில் சாப்பிட வேண்டும்? என்றெல்லாம் இருக்கும்.
ஆனால் அதன் பயன்பாடு என்ன? நம் உடலில் அதன் தாக்கம் எப்படி இருக்கும்? என்பதை பற்றியும் தெரிந்து கொள்வது அவசியம்.
அந்த வகையில், Ranitidine மாத்திரைகள் மற்றும் அதன் பக்கவிளைவுகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
Ranitidine மாத்திரை எதற்காக?
இரைப்பை மற்றும் குடல் புண்களை குணப்படுத்த Ranitidine பயன்படுத்தப்படுகிறது.
வயிற்றெரிச்சல், அல்சர், வயிற்று வலி, நெஞ்செரிச்சல், வாயுத்தொல்லை உள்ளவர்களுக்கு Ranitidine மாத்திரை பரிந்துரைக்கப்படுகிறது.
வயிற்றுக்குள் சுரக்கும் அமிலத்தின் அளவை கட்டுப்படுத்துவதுடன், Zollinger-Ellison syndrome நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது.
பக்கவிளைவுகள்
தலைவலி, தலைச்சுற்றல்
நெஞ்சுவலி, மூச்சுவிடுவதில் சிரமம்
வாந்தி, குமட்டல்
மனக்குழப்பம், இதயப் படபடப்பு
மஞ்சள்காமாலை
அடர் சிறுநீர்
காய்ச்சல், சளியுடன் கூடிய இருமல்
தோல் அல்லது முடி சார்ந்த பிரச்சனைகள்
நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு மாத்திரைக்கும் பக்கவிளைவுகள் உண்டு, ஏனெனில் மனிதர்க்கு மனிதர் மரபணுக்கள் வேறுபடும், அதைப்போல தான் ஒருவருக்கு ஒருவர் பக்கவிளைவுகளும் மாறுபடலாம்.
எப்படி சாப்பிட வேண்டும்?
வாய் வழியாக உணவுக்கு முன் அல்லது உணவுக்கு பின் மருத்துவர்கள் பரிந்துரைப்படி எடுத்துக்கொள்ளலாம்.
ஒருநாளில் ஒருமுறை அல்லது இரண்டு முறை, மருத்துவர்கள் கூறிய அளவுகளில் மட்டுமே எடுக்கவும், அதிகளவில் எடுத்துக்கொண்டால் பக்கவிளைவுகள் ஏற்படலாம்.
எந்த மாத்திரையாக இருந்தாலும் மருத்துவர் பரிந்துரைக்கும் நாட்களில் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.
சுயமாக அதே மருந்துகளை எடுத்துக்கொள்வதை கண்டிப்பாக தவிர்க்கவும் அல்லது மருத்துவர் குறிப்பிட்ட நாட்களை விடுத்து அதிக நாட்கள் எடுத்துக்கொள்வதையும் தவிர்க்கவும்.
யார் எடுத்துக்கொள்ளக்கூடாது?
கல்லீரல், சிறுநீரக நோயாளிகள் Ranitidine மாத்திரை எடுத்துக்கொள்ளும் முன் மருத்துவரிடம் தெரியப்படுத்தவும்.
கர்ப்பிணிகள், தாய்பாலூட்டும் பெண்கள், தாயாகும் முயற்சியில் இருப்பவர்கள் எடுத்துக்கொள்ளக்கூடாது. ம
ருத்துவரிடம் கலந்து ஆலோசிக்காமல், 12 வயதுக்கு குறைவானவர்கள் எடுத்துக்கொள்ளக்கூடாது, குழந்தைகளின் எடையை பொறுத்தே Dosage அளவுகள் இருக்கும்.