விவாகரத்து குறித்து முதல் முறையாக ஓபனாக பேசிய பிரபலம்! இவ்வளவு கஷ்டப்பட்டாரா?
பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வலம் வரும் ரம்யா தனது கணவருடன் விவாகரத்து பெற்றதற்கான காரணத்தை முதன்முறையாக வெளியிட்டுள்ளார்.
தொகுப்பாளர் பயணம்
பிரபல தொலைக்காட்சியில் மிக நீண்டக்காலமாக நிகழ்ச்சி தொகுப்பாளர்களாக பணியாற்றி வருகிறார் ரம்யா.
இவர் பிரபல தொலைக்காட்சியில் கலக்கப் போவது யாரு, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, நம்ம வீட்டு கல்யாணம், கில்லாடிகள் போன்ற நிகழ்ச்சிகளில் ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.
இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா? ஆம், இவர் தற்போது தொகுப்பாளர் பணியிலிருந்து சற்று விலகிய பின்னர் சினிமா பக்கம் சென்று மங்காத்தா, ஓ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி போன்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
காதல் திருமணம்
இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு அஜித் ஜெயராமன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்தை தொடர்ந்து இவர் தொகுப்பாளர் பணியிலிருந்து விலகப்போவதாக ஊடகங்களுக்கு அறிவித்திருந்தார்.
ஆனால் திருமணம் முடிந்து ஓரிரு ஆண்டுகளிலே மீடியாத்துறைக்கு ரீ என்றி கொடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து இவர் தன்னுடைய திருமணம் வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டது என்று அவ்வப்போது நிகழ்ச்சிகளில் சாடையாக கூறி வந்தார்.
ஓபனாக கூறிய சில விடயங்கள்
இந்நிலையில் தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து சமிபத்தில் பேட்டியொன்றில் கூறியிருந்தார். அதற்கு அவர் பதிலளிக்கையில், “அது ஒரு 6 வருடத்திற்கு முன் நடந்த ஒரு விஷயம் எனக்கே நியாபகம் இல்லை.
கண்டிப்பா வருத்தம் இருந்தது, Depression இருந்தது. எனக்கு ஏன் முதலில் இப்படி நடந்தது, எதுவும் தெரியாமல் என்னை மற்றவர்கள் ஏன் தவறாக பேசுகிறார்கள் என நிறைய வருத்தமாக இருந்தது.
மேலும், இந்த தாக்கத்தில் இருந்து வெளியாக எனக்கு 6 முதல் 8 மாதம் ஆனது, ஆனால் இந்த ஒரு விஷயத்தில் இருந்து வெளியே வரும்போது எனக்கு தைரியம் கிடைத்தது” என தான் இருந்த சூழ்நிலையை விளக்கியுள்ளார்.
இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.