Honeymoon முடிந்த கையோடு கணவருடன் ரம்யா பாண்டியன் கொடுத்த அப்டேட்
திருமணத்திற்கு பின்னர் ரம்யா பாண்டியன் கொடுக்கும் அப்டேட்கள் சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகின்றன.
ரம்யா பாண்டியன்
தென்னிந்திய பிரபலங்களில் வளர்ந்து வரும் நடிகையாக பார்க்கப்படுபவர் தான் நடிகை ரம்யா பாண்டியன்.
இவர், பிரபல நடிகர்அருண் பாண்டியனின் அண்ணன் மகள் ஆவார். சினிமா குடும்பத்திலிருந்து சினிமாவுக்குள் வந்திருந்தாலும் பெரிதாக படவாய்ப்புகள் ரம்யா பாண்டியனுக்கு கிடைக்கவில்லை.
இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி கலந்து கொண்டு சமூக வலைத்தளங்களில் பிரபலமடைந்த ரம்யா பாண்டியன் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்வார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு அவருக்கென ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார்.
கோவிலுக்கு சென்ற ரம்யா பாண்டியன்
இந்த நிலையில் லோகன் தவான் என்பவரை நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவரிடம் கடந்த ஆண்டு முதல் ரம்யா பாண்டியன் யோகா பயிற்சி செய்து வந்துள்ளார்.
ரம்யா பாண்டியன் - லோகன் தவான் காதலை இருவீட்டாரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இவர்களின் திருமணம் அடுத்த மாதம் நடைபெறும் என தகவல் வெளியாகிய நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சொந்தங்களுக்கு முன்னிலையில் நடந்து முடிந்துள்ளது.
இதனை தொடர்ந்து கணவருடன் ஹனிமூனில் பிஸியாக இருந்த ரம்யா பாண்டியன் நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்துள்ளார். அந்த சமயத்தில் நடிகர் சூரியும் சுவாமி தரிசனத்திற்கு அங்கு வந்திருக்கிறார்.
இதன்போது எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. “ தம்பதிகளாக முதல் பொது வெளியில் சந்தித்தவர் நடிகர் சூரியா? என நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |