11 ஆண்டுக்கு பின்பு பிறந்த தேவதை... மகளுக்கு ராம் சரண் வைத்த பெயர் என்ன தெரியுமா?
ராம்சரண்- உபாசனா குழந்தையின் பெயர் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராம் சரண் மகள் பெயர்
தெலுங்கு சினிமா உலகில் மாஸ் ஹீரோவாக வலம் வரும் ராம் சரண் பல வெற்றிப்படங்களைக் கொடுத்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றார்.
இவரது தந்தை தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ஆவார். தந்தையைப் போன்று டோலிவுட்டிலும் கலக்கி வரும் இவர், சமீபத்தில் தெலுங்கில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான RRR படம் அமோக வெற்றியை பெற்றது.
ராம் சரண் 2011ம் ஆண்டு உபாசனா காமினேனி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் 11 ஆண்டுகள் கழித்து தற்போது கர்ப்பமாக இருந்து கடந்த 20ம் தேதி பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
11 ஆண்டுகள் கழித்து பிறந்த தனது தேவதைக்கு குறித்த தம்பதிகள், க்ளின் காரா கோனிடேலா என வித்தியாசமாக பெயர் வைத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து ராம் சரணுக்கும் அவரின் மனைவிக்கும் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |
