பிரியங்கா மேல க்ரஷ்! ஷாக் கொடுத்த மன்சூர் அலிகான் - அப்படியே மிரண்டு போன தொகுப்பாளினி
தொகுப்பாளினி பிரியங்கா மீது க்ரஷ் என்று நடிகர் மன்சூர் அலிகான் கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சியான ராஜூ வூட்ல பார்ட்டி என்கிற நிகழ்ச்சி கலகலப்பாக போய்க்கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் ராஜூ மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்கி வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் வாரம் ஒரு தனி நபரோ, ஒரு குழுவோ சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரைப்பட நடிகர் மன்சூர் அலிகான் நிகழ்ச்சிக்கு முன்பு தொகுப்பாளினி பிரியங்காவுடன் பேசுகின்றார்.
தொகுப்பாளினி பிரியங்காவும் நிகழ்ச்சிக்கு முன்பு சில கேள்விகளை கேட்கின்றார்.
இதன் போது நடிகர் மன்சூர் அலிகானிடம் உங்கள் க்ரஷ் யார் என்று கேள்வி எழுப்புகின்றார். உடனே அவர் பிரியங்கா என்று கூறி தொகுப்பாளினிக்கு ஷாக் கொடுக்கின்றார்.
மிகவும் கலகலப்பாக அவர் பேசிய இந்த வீடியோ காட்சிகள் இணைத்தில் தீயாய் பரவி வருகின்றது.