வீடு திரும்பிய ரஜினிகாந்த்... அளவில்லா அன்பு ரசிகர்களே என வெளியிட்ட அறிக்கை
நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய நிலையில், ரசிகர்களுக்கு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
நடிகை ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 30ம் தேதி உடல்நலக் கோளாறு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதயத்திலிருந்து வெளியேறும் பிரதான ரத்தக் குழாயில் வீக்கம் ஏற்பட்டடுள்ளதைக் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அறுவை சிகிச்சை இல்லாத டிரான்ஸ்கேட்டர் முறையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு ஐசியூ-வில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் இன்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய ரஜினிகாந்த் அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
ரஜினியின் அறிக்கை
தமது டுவிட்டர் பக்கத்தியில் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் மருத்துவமனையில் இருக்கும் போது, நான் சீக்கிரம் உடல்நலம் பெற என்னை வாழ்த்திய அனைத்து அரசியல் நண்பர்களுக்கும், திரைப்பட துறையை சார்ந்தவர்களுக்கும், எனது அனைத்து நண்பர்களுக்கும், நலவிரும்பிகளுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் என்று தெரிவித்துள்ளார்.
Superstar #Rajinikanth's THANK YOU message:
— Manobala Vijayabalan (@ManobalaV) October 4, 2024
My sincere thanks to all my political friends, people from the film industry who wished me a speedy recovery while I was in the hospital, to all my friends, well-wishers, press friends, and to my fans, who are the Gods who keep me… pic.twitter.com/GHmpxvB1lI
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |