புது லுக் செம்ம தலைவா- ரஜினியின் புகைப்படத்தை வெளியிட்ட சவுந்தர்யா - தெறிக்க விடும் ரசிகர்கள்
‘புது லுக் செம்ம தலைவா...’ என்று ரஜினியின் புகைப்படத்தை சவுந்தர்யா டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் மகள்கள்
சினிமாவில் சூப்பர் என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்டு, வலம் வருபவர் ரஜினிகாந்த். இவருக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என இரு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் தந்தையைப் போல் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற முனைப்போடு இயக்குனராக அவதாரம் எடுத்து சாதனை படைத்து வருகிறார்கள்.
ஐஸ்வர்யா தனுஷை வைத்து 3 படத்தை இயக்கி உள்ளார். அதேபோல் சவுந்தர்யா ரஜினியை வைத்து கோச்சடையானும், தனுஷை வைத்து ‘வேலையில்லா பட்டதாரி 2’ படமும் இயக்கியுள்ளார். ஆனால், இருவருக்கு எதிர்பர்த்த வெற்றி கிட்டவில்லை. இதனால் இருவரும் இல்லற வாழ்க்கையில் கவனம் செலுத்த தொடங்கி விட்டனர்.
இதனையடுத்து, நடிகர் தனுஷை கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் செய்தார் ஐஸ்வர்யா. இவர்களுக்கு லிங்கா, யாத்ரா என இரு மகன்கள் உள்ளனர்.
அதேபோல் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா, கடந்த 2010-ம் ஆண்டு அஸ்வின் என்பவரை மணந்தார். இவர்களுக்கு வேத் என்ற மகன் உள்ள நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் அஸ்வினை விவாகரத்து செய்தார் சவுந்தர்யா.
மகளின் இந்த முடிவு ரஜினிக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியது. இதனையடுத்து, கடந்த 2019-ம் ஆண்டு விசாகன் என்பவரை 2-வது திருமணம் செய்துகொண்டார் சவுந்தர்யா. சமீபத்தில் சவுந்தர்யாவிற்கு 2-வதாக குழந்தை பிறந்தது.

புது லுக்கில் ரஜினிகாந்த்
இந்நிலையில், ரஜினி மகள் சவுந்தர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில், ‘மும்பையில் அப்பாவுடன், நீதா அம்பானியின் கலாச்சார மைய திறப்பு விழாவில். புது லுக் செம்ம தலைவா' என பதிவிட்டுள்ளார்.
தற்போது இது தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. கிளீன் ஷேவில் மீசையுடன் ரஜினியின் நியூ லுக் இணையதளத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.
Mumbai with appa dearest .. at aunty Nita Ambani s cultural center opening night !!! New look semma thalaiva ?????? ?#ThalaivarNewLook pic.twitter.com/DBzlug1FN6
— soundarya rajnikanth (@soundaryaarajni) March 31, 2023