அம்பானி வீட்டு திருமணத்தில் அமிதாப் பச்சன் காலில் விழுந்து வணங்கிய ரஜினிகாந்த்: காரணம் என்ன?
அம்பானி வீட்டு திருமணத்தில் அமிதாப் பச்சன் காலில் ரஜினிகாந்த் விழுந்து வணங்கிய சம்பவம் தற்போது வீடியோவாக வைரலாகி வருகின்றது.
வைரல் வீடியோ
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சென்டின் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். தென்னிந்திய நடிகர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது மனைவி மற்றும் மகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
இதன்போது அமிதாப் பச்சனுடன் ரஜினிகாந்த் உரையாடும் விதம் தற்போது சர்ச்சையாகி வருகின்றது.
ஜாம்பவான் அமிதாப் பச்சனுடன் பேசி கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் அவரது காலில் விழுந்து வணங்க முயற்சிக்கிறார். அதனை தடுத்த அமிதாப் பச்சன் ரஜினிகாந்தை கட்டி தழுவி கொண்டார்.
பின்னர் இருவரும் கைகுலுக்கி கொண்ட பின்னர் சிறிது நேரம் உரையாடுவது போல் வீடியோ உள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |