விஜய் முதல்வரானதால் எனக்கு பொறாமையா? நடிகர் ரஜினிகாந்த் கொடுத்த தெறிபதில்!
நான் அரசியலிலேயே இல்லை, பிறகு ஏன் விஜய் முதல்வர் ஆவதற்கு நான் பொறாமைப்பட வேண்டும்? என சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த மே 4 ஆம் திகதி வெளியானதில் இருந்து, திமுக - அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்க ரஜினிகாந்த் முயன்றதாக செய்திகள் பரவியதுடன் விஜய் முதல்வரானது ரஜினிகாந்த்திற்கு பிடிக்கவில்லை என்ற கருத்து பரவலாக பேசப்பட்டது.இந்நிலையில் இது குறித்து ரஜினி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் கொடுத்துள்ளார்.

ரஜினி பேட்டி
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் ரஜினி பேசுகையில், முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் தோல்வி எனக்கு வருத்தமாக இருந்தது. அவர் எனக்கு 38 ஆண்டுகளுக்கு மேலான நண்பர்.எங்களின் நட்பு, அரசியலுக்கு அப்பாற்பட்டது... அதற்காக அவரை சந்தித்து ஆறுதல் கூறினேன்.
ஆனால், விஜய் முதல்வராக தடுக்க, பெரிய இரண்டு கட்சிகளை இணைக்க முயன்றதாக விமர்சனங்கள் எழுந்தன. அப்படி தரம்கெட்டு பேசுபவன் இந்த ரஜினிகாந்த் இல்லை. என ஆதங்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விஜய் மீது பொறாமை என்றெல்லாம் கூறிவருகின்றார்கள்... நான் அரசியலிலேயே இல்லை, பிறகு ஏன் விஜய் முதல்வர் ஆவதற்கு நான் பொறாமைப்பட வேண்டும்? ஒருவேளை கமல் முதல்வராகி இருந்தால் பொறாமை வந்திருக்குமோ இல்லையோ? எனக்கும் விஜய்க்கும் கிட்டத்தட்ட 25 ஆண்டு தலைமுறை வித்தியாசமே காணப்படுகின்றது.
அவர் முதல்வராக ஆவதற்கு எனக்கு ஏன் பொறாமை? இந்த வயதில் சினிமாவில் இருந்து ஒருவர், இரு பெரும் கட்சிகளை எதிர்த்து தனி ஆளாக வெற்றிப்பெற்றது பொறாமை இல்லை, ஆச்சரியம் கலந்த சந்தோஷத்தையே கொடுத்தது.

சினிமா புகழின் மூலம் அவருக்கு வெற்றி கிடைத்துள்ளது. அவகாசம் பெரும் எதிர்பார்ப்பு விஜய் மேல் இருக்கிறது. அதனை பூர்த்தி செய்வார் என நம்புகிறேன். மக்களை சந்தித்து நல்லது செய்வார் என நம்புகிறேன். அவரை 2 ஆண்டுகளுக்கு எந்த தொந்தரவும் செய்யக்கூடாது. அவருக்கு அவகாசம் கொடுக்க வேண்டும். இனிமேல் அவர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
தொண்டர்கள், ரசிகர்கள் என யார் என்ன தப்பு செய்தாலும், நேரடியாக விஜயை தான் பாதிக்கும். நான் ஏன் அரசியலுக்கு வரவில்லை என சுமார் 3 பக்கத்திற்கு விளக்கம் கொடுத்துள்ளேன். நான் அரசியலுக்கு வந்திருந்தால் 100 சதவீதம் வெற்றிப்பெற்றிருப்பேன்.

சினிமா துறையில் இருந்து பலரும் போய் முதல்வர் விஜயை பார்த்துவிட்டு வந்துள்ளனர். சும்மா சம்பிரதாயத்திற்கு போய் பார்த்துவிட்டு வருவது எனக்கு பிடிக்காது.
60 ஆண்டுகள் இரு கட்சிகளை பார்த்துவிட்டு மாற்றம் தேவை என இளைஞர்கள், பெண்கள் முடிவு செய்து விஜயை தேர்ந்தெடுத்துள்ளனர். இளைஞர்கள், பெண்கள் மட்டுமல்ல சமூக வலைதளமும் முக்கிய பங்கு வகித்தது. விஜய்க்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். என குறிப்பிட்டு சர்ச்சைகளுக்கு தரமான பதிலடி கொடுத்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |