கணவரின் பிறந்தநாளில் காஜல் அகர்வால் கொடுத்த சர்ப்ரைஸ் - வைரலாகும் குடும்ப புகைப்படம்
காஜல் அகர்வால் தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
காஜல் அகர்வால் - கௌதம் கிட்ச்லு தம்பதியருக்கு கடந்த மாதம் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தைக்கு 'நெய்ல்' என பெயரிட்டுள்ளனர்.
குடும்ப பெயரான கிட்ச்லு உடன் இணைத்து நெய்ல் கிட்ச்லு என இக்குழந்தை அழைக்கப்படுகிறது. அன்னையர் தினத்தில் குழந்தையின் புகைப்படத்தை காஜல் அகர்வால் வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் காஜல் அகர்வால், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையின் புதிய புகைப்படத்தை "இந்த உலகின் சிறந்த தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்" என தலைப்பிட்டு வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில் கணவர் கௌதம் கிட்சுலுவுக்கு முத்தம் கொடுத்தது போலவும் குழந்தை கௌதமின் மடியில் படுத்து இருப்பது போலவும் அந்த புகைப்படம் அமைந்துள்ளது.