மூத்த மகளுக்காக ரஜினிகாந்த் எடுத்துள்ள முடிவு! பாராட்டும் ரசிகர்கள்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் புதிய படத்தில் கௌரவ தோற்றத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனராக அறிமுகம்
தனுஷ்- ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
இதனையடுத்து வை ராஜா வை என்ற படத்தையும், சினிமா வீரன் என்ற ஆவணப்படத்தையும் இயக்கினார்.
தன்னுடைய மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுக்காக சினிமாவில் இருந்து ஒதுங்கிய ஐஸ்வர்யா, சமீபத்தில் ஆல்பம் பாடல் ஒன்றை இயக்கினார்.
அப்பாவுடன் சினிமா
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் மகளின் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதர்வா நடிப்பில் உருவாகும் அந்த படத்தில் மகளுக்காக ரஜினிகாந்த் நடிக்கவிருக்கிறராம்.
நவம்பர் மாதம் இதன் பூஜை நடக்கவுள்ளதாகவும், லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.