திடீரென வைரலாகும் ரஜினியின் குடும்ப புகைப்படம்... இதுவரை அவதானித்திருக்கவே மாட்டீங்க
சினிமாவில் தற்போதும் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினிகாந்தின் குடும்ப புகைப்படம் ஒன்று தீயாய் பரவி வருகின்றது. சமீப காலங்களில் அரசியலில் களமிறங்குவதாக கூறிய ரஜினி பின்பு தனது உடல்நலக்குறைவினால் அரசியலில் இறங்கவில்லை என்று கூறியது ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இவர் லதா ரஜினிகாந்தை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் ஐஸ்வர்யா, சவுந்தர்யா என இரு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஐஸ்வர்யா, நடிகர் தனுசையும், இரண்டாவது மகள் சவுந்தர்யா, தொழிலதிபர் வசீகரனையும் திருமணம் செய்து கொண்டனர். சினிமாவிலும் தனது திறமையினைக் காட்டி வரும் இவர்களின் டீன் ஏஜ் புகைப்படங்கள் தற்போது திடீரென வைரலாகி வருகின்றது.
சினிமாவில் பிஸியான நடிகரான ரஜினி தனது குடும்பத்துடன் எந்த அளவிற்கு ஒன்றி போய் உள்ளார் என்பதை இந்த புகைப்படங்கள் காட்டுவதாக ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

