நம்ம மயில்லா இது... இவ்ளோ அழகா... ; சேலையில் கலக்கும் வீடியோ!
நடிகை நவ்யா சுஜியின் சேலையில் கலக்கும் வீடியோ ஒன்று இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சேலையில் கலக்கும் மயிலு
சில நடிகைகளை கொடுக்கும் கதாபாத்திரத்திற்கு அப்படியே தன்னை மாற்றிக்கொள்வார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் நடிகை நவ்யா சுஜி. இவர் ‘ராஜா ராணி 2’ சீரியலில் மயில் என்ற வேலைக்கார பெண்ணாக நடித்திருந்தார். இவர் நடிகை மட்டுமல்ல, ஒரு மாடல் அழகியும் ஆவார். இவர் விஜயவாடாவில் பிறந்தார். கடந்த 2015ம் ஆண்டு மிஸ் ஏபி என்ற அழகிப் போட்டியில் ஒருவராக கலந்து கொண்டார்.
மாடலிங் துறையில் சுஜி இருந்தபோது, தமிழ்ப் படம் 2 படத்திற்கான ஆடிஷனுக்கு வந்தார். அப்போது, தெலுங்கில் வசனம் எழுதி நடித்தார். அன்றே அவருக்கு அப்படத்தில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தது.
எப்போதுமே சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நவ்யா அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவரது புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், நவ்யா தன் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சேலையில் தேவதை போல் அசத்துகிறார்.
இதோ அந்த வீடியோ -
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |