முகம்சுழிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு கண்ணீர் விட்ட ரைசா! அதிர்ச்சியில் ரசிகர்கள்
நடிகை ரைசா கண்ணீருடன் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ரைசா
பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டு பிரபலமான ரைசா பின்பு பல படங்களில் நடித்து மக்களிடையே பிரபலமானார்.
சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர், பல போட்டோஷுட்டுகளை நடத்தி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.
இந்நிலையில் நடிகை ரைசா வில்சன் பொழுது விடிவது போன்ற ஒரு புகைப்படத்தோடு அழுதபடியே இருக்கும் சில புகைப்படங்களையும் இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். கேப்ஷனில் யாரும் தனியாக இல்லை. நாம் அனைவரும் படிப்படியாக அதைக் கண்டுபிடித்து வருகிறோம் என்று பதிவிட்டுள்ளார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் பல கேள்விகளை கேட்டு வரும் நிலையில், சிலர் இவருக்கு ஆறுதல் கூறியும், அதிர்ச்சியை வெளிப்படுத்தியும் வருகின்றனர்.
இன்னும் சில ரசிகர்கள் எல்லோரும் இதுபோன்ற மனநிலை வருவது சகஜம் தான். எல்லாம் கடந்துபோகும். தைரியமாக இருங்கள் என்று கூறி வருகின்றனர்.
சிலர் இவர் அதிக மனஅழுத்தத்தில் இருக்கின்றார் தயவு செய்து இவரை கவனியுங்கள் என்று வேதனையோடு பதிவிட்டுள்ளார்.