ராகு, செவ்வாய் கிரகத்தினால் அடித்த டபுள் ஜாக்பாட்.... எந்தெந்த ராசிக்கு தெரியுமா?
Mars, Rahu Samsaptak Yog: செவ்வாய், ராகு நேருக்கு நேர் இருக்கும் நிலையில் இதனால் ஜாக்பாட் பெரும் ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஜோதிடத்தில் கிரகங்களின் நகர்வுகள், மாற்றங்கள் இவை அனைத்தும் முக்கியமாக பார்க்கப்படுகின்றது. ஏனெனில் இவ்வாறான தருணங்களில் அனைத்து ராசிக்கும் தாக்கம் ஏற்படும்.
அந்த வகையில் கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய், தைரியம், வீரம், தன்னம்பிக்கை, துணிச்சல் இவற்றிற்கு காரணியாக இருக்கின்றார். செவ்வாயின் மாற்றம் நிகழும் போது அனைத்து ராசியிலும் ஒரு தாக்கம் ஏற்படும்.
இந்நிலையில் நவம்பர் 12ம் தேதி சிம்ம ராசிக்குள் செவ்வாய் நுழைந்துள்ள நிலையில், ஏற்கனவே கேது இருப்பதால், செவ்வாய் கேது சேர்க்கை உருவாகியுள்ளது.
மறுபுறம் ராகு கும்ப ராசியில் இருப்பதால், செவ்வாய் மற்றும் ராகுவினால் சம்சப்தம யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகத்தினால் சில ராசியினர் நிதி ஆதாயத்தினை பெறுகின்றனர்.
அதாவது செவ்வாய் சிம்ம ராசியிலும், ராகு கும்ப ராசியிலும் 7ம் வீட்டில் இருப்பதால் இந்த யோகம் உருவாகியுள்ளது. டிசம்பர் 5ம் தேதி வரை நீடித்திருக்கும் நிலையில், பின்பு ராகு மகர ராசிக்குள் நுழைகின்றார்.
இந்த யோகத்தினால் அதிர்ஷ்டத்தினை பெறும் 3 ராசியினர் யார் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

மிதுனம்
மிதுன ராசியினருக்கு இந்த யோகத்தினால் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும் நிலையில், பயணத்தினால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்குமாம்.
நடிக உழைப்பிற்கான பலன் கிடைப்பதுடன், குடும்ப உறுப்பினர்களுடன் உறவும் மேம்படும். ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றியை பெறுவதுடன், சோம்பலை விட்டு கடினமான உழைத்தால் அடுத்தடுத்து வெற்றியினை காணலாம்.

விருச்சிகம்
விருச்சிய ராசியினருக்கு இந்த யோகத்தினால் ஏராளமான நன்மைகள் கிடைப்பதுடன், தொழில் ரீதியாகவும் ஏற்ற, இறக்கங்கள் இருக்கும்.
ஆனால் முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்பும் கிடைப்பதுடன், திறம்பட வாய்புகளை பயன்படுத்தினால் நல்ல உயரத்தினை அடையலாம்.
பணியிடத்தில், புதிய பொறுப்புகள் கிடைக்கும். சொத்துக்கள் தொடர்பான முக்கிய முடிவுகளை அவசரப்பட்டு எடுப்பதை தவிர்க்க வேண்டும். நன்றாக யோசித்து முடிவெடுத்தால் வெற்றியை காணலாம்.

மீனம்
மீன ராசியினருக்கு இந்த யோகத்தினால் டிசம்பர் 5ம் தேதி வரை பொற்காலமாக இருப்பதுடன், வேலையில் போட்டி அதிகரிக்கலாம். ஆனாலும் கடின உழைப்பு நல்ல வெற்றியினை கொடுக்கும்.
நீங்கள் விடமுயற்சியுடன் செய்யும் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைப்பதுடன், நிதி ரீதியாகவும் சிறப்பாக இருக்குமாம். அவசரப்பட்டு பண பரிவர்த்தனை எதுவும் செய்ய வேண்டாம்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |