ராகு, கேதுவின் அரிய சேர்க்கை... எதிர்மறையான பலனை பெறும் 4 ராசியினர்
ராகு, கேது அரிய சேர்க்கையினால் பொற்காலத்தினை பெறும் ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ராகு கேது சேர்க்கை
ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகமும் தங்களது காலக்கட்டத்தில் ராசி மற்றும் நட்சத்திரத்தினை மாற்றும் நிலையில், ஜுலை மாதத்தில் முக்கியமான கிரக மாற்றங்கள் நிகழ்கின்றது.
ஜுலை மாதத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் மற்றும் சனி ஆகிய ஏழு கிரகங்களும் ராகு மற்றும் கேதுவிற்கு இடைப்பட்ட பகுதியில் அமைகின்றது.
ஜுலை 19 அன்று கன்னி ராசியில் இந்த கிரக அமைப்பினை உடைக்கும் வரை நிலை நீடிக்குமாம். ஆதலால் ராகு மற்றும் கேது ஒன்றுக்கொன்று 180 டிகிரி இடைவெளியில் அமைந்துள்ளது.
தற்போது ராகு கும்ப ராசியிலும், கேது சிம்ம ராசியிலும் உள்ள நிலையில், மற்ற கிரகங்கள் இவற்றிற்கு இடைப்பட்ட பகுதியிலை அமைந்துள்ளது. இதை அரிதான கிலை என்று குறிப்பிடப்படுகின்றது.
இந்த கிரக அமைப்பினால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசியினர் யார் யார் என்பதை தெரிந்து கொள்வோம்.

மிதுனம்
மிதுன ராசியினர் ஜுலை 19வரை தொழில் முறை இவற்றில் முடிவெடுப்பதில் குழப்பம் மற்றும் தவறான புரிதல் ஏற்படலாம். இந்த கிரக அமைப்பினால் பல வகையான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் நிலையில், தவறான புரிதலும் ஏற்பட வாய்ப்பு உள்ளதுடன், வாக்குவாதங்களும் ஏற்படலாம்.
இத்தருணத்தில் பொறுமையாகவும் நிதானமாகவும் இருப்பதன் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிக்கலாம். உங்கள் குழந்தைகள் பற்றிய கவலை அதிகரிப்பதுடன், சற்று எச்சரிக்கையாக இருப்பது சிறந்தது..

கடகம்
கடக ராசியினருக்கு இந்த அரிய சேர்க்கையினால் எதிர்மறை பலன்கள் ஏற்படுவதுடன், வாக்குவாதம் தீங்கும் விளைவிக்கும் என்பதால் அதனை தவிர்கக்வும்.
வாகனங்களில் செல்லும் போது கவனமாக செல்லவும், திருமணத்தில் அமைதியாக செயல்பட வேண்டும். அவ்வாறு இல்லையெனில் தற்காலிக பிரிவு கூட ஏற்படலாம். ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது மிகவும் அவசியமாகும்.

சிம்மம்
சிம்ம ராசியில் தற்போது கேது உள்ளதால் முடிவெடுப்பதில் சிக்கல் ஏற்படலாம். இந்த காலக்கட்டத்தில் செய்யும் வேலையில் கவனமாக இருக்கவும். சக ஊழியர்களுக்கு உதவி செய்ய முயற்சிப்பதுடன், பொறுமையாக இருந்து ஒவ்வொரு பணியையும் சரியாக செய்வது சிறந்தது.
திருமண உறவில் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதுடன், சரியான புரிதல் இல்லையெனில் கருத்து வேறுபாடு ஏற்படலாம்.
தொழிலில் சில நெருக்கடிகள் ஏற்படலாம். தனிப்பட்ட வாழ்க்கை, தொழிலில் சில பின்னடைவினை சந்திக்கலாம்.

கும்பம்
கும்ப ராசியில் ராகு இருப்பதால் தொழில் சார்ந்த முடிவு மற்றும் பணியிட உறவுகளில் கவனமாக இருக்கவும். வேலையில் அழுத்தம் அதிகரிப்பதுடன், கடுமையான சிரமத்தையும் சந்திக்க நேரிடும்.
சில தருணங்களில் நிலைமை மோசமாகி வேலையை இழக்கவும் நேரிடலாம். வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் ஏமாற்றங்களை சந்திக்கலாம்.
எதிர்பார்த்த லாபம் கிடைக்காமலும், சக ஊழியர்கள் உங்களது நட்பு மற்றும் இரக்க குணத்தை தவறாக பயன்படுத்தலாம். ஆதலால் உங்களது நற்பெயருக்கு பிரச்சனையும் ஏற்பட வாய்ப்புள்ளது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |