அழிவு கிரகம் ராகு, கேது பெயர்ச்சியால் 2022 இல் யாருக்கு கோடீஸ்வர யோகம்! குவியல் குவியலாக வந்து சேரும் பணம்!
ராகுவும் கேதுவும் ஓவ்வொரு ராசியிலும் ஓன்றறை ஆண்டுகள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள்.
பிறந்த ஜாதகத்தில் ராகு- கேது மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம், ஆகிய வீடுகளில் இருந்தால் வலுவான யோகம் உண்டு என்று நூல்களில் சொல்லப்பட்டுள்ளது.
ராகு கேது பார்வைகள் யார் யாருக்கு என்னமாதிரியான பலன்கள் என்று பார்க்கலாம்.
சிம்மம்
ராகு பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கு வரப்போவதால் நிர்வாக பொறுப்புகள் தேடி வரும். நிண்ட நாட்களாக எதிர்ப்பார்த்த உதவிகள் வேலை வாய்ப்புகள்,வெளிநாட்டு பயணங்கள் அனுகூலம் ஆதாயத்தை தரும். நிகழப்போகும் ராகு கேது பெயர்ச்சி விடிவையும் விமோசனத்தை தந்து காசு,பணம் சம்பாத்தியம் சேமிப்பையும் அதிகரிக்கும் என்பது உறுதி.
கன்னி
ராகு பெயர்ச்சி யோகத்தையும் அதிர்ஷ்டத்தையும் பெருமை புகழையும் தருவார். இது வரை கலங்கிய களங்கப்பட்ட வாழ்க்கை ஓளி மயமான வாழ்க்கைக்கு வழிகாட்டுவார்.
ராகு சூது கிரகம் என்பதால் எதிர்ப்பாராத பணம் பொன் பொருள் சேர்க்கை வீடு வாசல் போன்ற வசதிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. குடும்ப ஸ்தானத்திற்கு கேது வருவதால் சொல்லும் செயலும் வெற்றி பெறும். ராகு கேது பெயர்ச்சி மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரும் என்பதில் ஐயமில்லை.
துலாம்
கடந்த காலங்களில் பொருளாதார நெருக்கடியில் முழ்கி உழைப்பு சம்பாத்தியம் அனைத்தையும் அசலுக்கு மேல் வட்டி கட்டி சோற்றுக்கே கடனை வாங்கி நொந்து போனவர்களுக்கு புதிய தொழில் அதிக லாபத்தை தரலாம்.
குடும்ப கேதுவால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை நீங்கும். கருத்து வேற்றுமை மாறி ஓன்று சேரலாம்.
உற்றார் உறவினர் நட்பு வட்டத்தால் உதவிகளை எதிர்பார்க்கலாம். அர்த்தாஷ்டம சனியால் ஏமாற்றம் சஞ்சலம் என்று வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு ராகு கேது பெயர்ச்சியால் மாற்றம் முன்னேற்றம் வரும்.
விருச்சிகம்
போட்டி பொறாமை பொடிபொடியாகும். தொழில் முயற்சிகள் கை கூடும். படித்து முடித்து வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும்.வெளிநாட்டு தொடர்புடைய உத்யோகம் கிட்டும்.பதவி உயர்வு பெற்று வருமானம் கூடும் வீடு மனை வாங்கும் யோகம் வரும்.
தேவைகள் பூர்த்தியாகும்.திருமணம் நீண்ட நாள் கனவான புத்திரசம்பத்து கிடைக்கும்.
இது வரை இழுத்தடித்த கோர்ட்டு வம்பு வழக்குகள் சாதகமாகும். ராகு கேது பெயர்ச்சி யோகம் செல்வாக்கு சொத்து சுகத்தை கொடுக்கும்.