ராகு கேது தோஷங்கள் நீங்கி வாழ்க்கை தலைகீழாக மாற வேண்டுமா? இதோ பரிகாரங்கள்
ஜோதிடத்தின் பார்வையில், நிழல் கிரகங்களான ராகுவும், கேதுவும் சர்ப்ப கிரகங்கள் என அழைக்கப்படும். ராகு மற்றும் கேது ஒன்றரை வருடத்தில் பெயர்ச்சி ஆகின்றன.
இந்த கிரகங்களின் பெயர்ச்சியினால் சில சமயம் சிறந்த பலன்களும் சில சமயம் அசுப பலன்களும் ஏற்படுகின்றன.
ராகு ,கேது ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.இல்லையென்றால் பல்வேறு பிரச்சனைகள் வந்து தொல்லை கொடுக்கும்.
ஒருவேளை, ஜாதகத்தில் ராகு-கேது தோஷம் இருந்தால், அதற்கு உடனடியாக பரிகாரம் செய்ய வேண்டும்.
ராகு-கேது தோஷத்தை நிவர்த்தி செய்வதில் காலதாமதம் செய்தால் உங்களின் வாழ்கை பாழாகிவிடும்.
அப்படியாக, ராகு, கேது தோஷம் மற்றும் ஜாதகத்தில் பலவீனமாக இருந்தால், அவற்றை எவ்வாறு நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஒருவருக்கு ராகு கேது தோஷத்தை நீக்கும் பரிகாரங்கள்:
- ராகு-கேது தோஷம் நீங்க துர்க்கை அம்மனை தொடர்ந்து வழிபடுவது பலன் தரும். அப்படி செய்தால், ராகு-கேதுவின் கோபம் நீங்கும். வாழ்க்கையின் இன்னல்கள் முடிவுக்கு வரும்.
- ராகு மற்றும் கேது தோஷத்தை நீக்க, தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் மூலம் ஏழை, எளியோருக்கு உணவளிப்பது எளிதான மற்றும் பயனுள்ள தீர்வாகும்.
- ஒவ்வொரு சனிக்கிழமையும் அரச மரத்தடியில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவதன் மூலம் ராகு கேதுவுடன் சனி கிரகமும் நல்ல பலன்களைத் தரத் தொடங்கும்.
- ராகு-கேது தோஷத்தை நீக்க, ராகுவின் 'ஓம் ரான் ராஹவே நம' என்ற மந்திரத்தையும், 'ஓம் கேதுவே நம' என்ற கேதுவின் மந்திரத்தையும் குறைந்தது 108 முறை உச்சரிக்கவும்.
- எனவே, ஒருவருக்கு ஜாதகத்தில் ராகு கிரகத்தின் நிலை சாதகமாக இருந்தால், புகழ், அங்கீகாரம் ஆகியவை கிடைக்கிறது.