எடையை சரி பாதியாக குறைக்கும் கேழ்வரகு மில்க் ஷேக்.... தயாரிப்பு உள்ளே!
கேழ்வரகு உணவுகளை வாரம் ஒரு முறை அல்லது இருமுறை சாப்பிட்டு வருவது உடலுக்கு பல நன்மைகளை செய்கின்றது.
கேழ்வரகு உண்பதை வழக்கமாக வைத்துக் கொண்டால், ஊட்டச்சத்து குறைபாடுகள், சிதைவு நோய்கள் போன்ற பல நோய்கள் உடலை அணுகாதவாறு பார்த்துக் கொள்ளலாம்.
உடலைக் குளிர்ச்சியாக்கும். உடலுக்கு வலுவையும் தரும். உடல் எடையை ஒரே மாதத்தில் சரி பாதியாக குறைக்க நினைப்பவர்களுக்கு அரு மருந்து.
உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பப்பாளி! யாரெல்லாம் சாப்பிடக்கூடாது
அரிசி சாதத்துக்குப் பதிலாக இந்தக் கூழைக் குடித்துவந்தால், விரைவாக எடை குறையும்.
கேழ்வரகு மில்க் ஷேக் செய்து கூட அடிக்கடி பருகலாம்.
கேழ்வரகு மில்க் ஷேக் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
- கேழ்வரகு - 50 கிராம்
- பாதாம், முந்திரி, திராட்சை (ஊற வைத்தது) - தலா 4
- பேரீச்சை - 5
- காய்ச்சியப் பால் - 200 மி.கி
- ஏலப்பொடி - 1 தேக்கரண்டி
- சர்க்கரை - சுவைக்கேற்ப
செய்முறை
முதல்நாள் இரவு ஊற வைத்த கேழ்வரகை நீர் விட்டு அரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
சக்கையை மீண்டும் சிறிது நீர் விட்டு அரைத்து வடிக்கட்டவும்.
ஊற வைத்து தோல் நீக்கிய பாதாம், முந்திரி, திராட்சை, பேரீச்சையை சிறிது பால் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
இரண்டு கேழ்வரகு பாலையும் ஒன்றாக சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் காய்ச்சவும். அத்துடன் அரைத்த பாதாம் விழுது, மீதம் உள்ள பால், ஏலப்பொடி சேர்த்து மேலும் சிறிது நேரம் காய்ச்சி இறக்கவும்.
சத்தான கேழ்வரகு மில்க் ஷேக் தயார்.
சுவையான மலபார் பரோட்டா ரிச் சுவையில் செய்வது எப்படி?