கெட்ட கொழுப்பை வேகமாக கரைக்கும் ராகி புட்டு.. தினமும் சாப்பிடுங்க- பலன் நிச்சயம்
பொதுவாக அநேகமான வீடுகளில் காலையுணவு பெரும்பாலும் இட்லி, தோசையாக தான் இருக்கும்.
அதுவும் டயட்டில் இருப்பவர்களுக்கு காலையில் இப்படியான உணவுகள் கொடுத்தால் சோர்வாகி விடுகிறார்.
உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பு கரைய வேண்டும், அதே சமயம் அன்றைய நாளில் இருக்கும் வேலைகளை செய்வதற்கு ஊட்டசத்துக்கள் அவசியம்.
அப்படியாயின், உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளில் ஒன்றான ராகி உருண்டை செய்து கொடுக்கலாம். அல்லது கார புட்டு அல்லது இனிப்பு புட்டு செய்தும் சாப்பிடலாம்.
கால்சியம் அதிகமாக கொண்டிருக்கும் ராகி மா சாப்பிடும் ஒருவரின் எலும்புகளுக்கு வலுவூட்டப்படும். சர்க்கரை வியாதியுள்ளவர்களும் சாப்பிடலாம்.
அந்த வகையில், கார ராகி புட்டு மற்றும் இனிப்பு ராகி புட்டு எப்படி செய்யலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ராகி மாவு - 2 கப்
- தண்ணீர் - தேவையான அளவு
- துருவிய தேங்காய் - 1/4 கப்
- எண்ணெய் - 1 டீஸ்பூன்
- கடுகு - 1/4 டீஸ்பூன்
- கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கொத்து
- சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)
- பச்சை மிளகாய் - 1 (நீளவாக்கில் நறுக்கியது)
- வேர்க்கடலை - 1 கைப்பிடி உப்பு - சிறிது
புட்டு செய்வது எப்படி?
ஒரு பாத்திரத்தில் ராகி மா எடுத்து, அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து புட்டு மாதிரி பிசைந்து கொள்ளவும்.
துருவிய தேங்காய் கைளால் எடுத்து கிளறி விட்டு, இட்லி தட்டில் போட்டு வேக வைக்கவும்.
சரியாக 15 நிமிடத்திற்கு பின்னர் மற்றுமொரு பாத்திரத்திற்கு மாற்றி கொள்ளவும், இனிப்பு ராகி புட்டு வேண்டும் என்றால் அதற்கு தனியாக எடுத்து வைக்கலாம்.
அடுத்து, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
அதனுடன் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், வேர்க்கடலை ஆகிய பொருட்களை போட்டு வதங்கி விட்டு தேவையான அளவு உப்பு அதனை கொட்டி கிளறி விட்டால் காரமான ராகி புட்டு தயார்!
இனிப்பு ராகி புட்டு செய்ய வேண்டுமானால், மற்றொரு பாத்திரத்தில் எடுத்து வைத்திருக்கும் புட்டில் துருவிய தேங்காய், நாட்டுச்சர்க்கரை, வேர்க்கடலை மற்றும் 1 டீஸ்பூன் நெய் சேர்த்து கிளறினால் இனிப்பு ராகி புட்டு தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |