சத்தான ராகி பிஸ்கட் செய்து பார்க்கலாம் வாங்க...
சின்னப் பசிக்கு நாம் என்றுமே தேடும் ஒரு உணவு என்றால் அது பிஸ்கட்தான்.
சுவையான பிஸ்கட் ஆரோக்கியமானதாகவும் இருந்தால் எப்படியிருக்கும். அந்த வகையில் ஆரோக்கியமான, சுவையான ராகி பிஸ்கட் எப்படி செய்யலாம் எனப் பார்ப்போம்.
image - Secondrecepie
தேவையான பொருட்கள்
கேழ்வரகு மா - 1 கப்
முட்டை - 1
இஞ்சி - 2 இன்ச் அளவு
நாட்டுச் சர்க்கரை - 1/2 கப்
பேக்கிங் பவுடர் - 1 கரண்டி
ஏலக்காய் - 4
எண்ணெய் - 1/2 கப்
உப்பு - 1/2 கரண்டி
image - Anybody canbake
செய்முறை
முதலாவதாக ஏலக்காயை சர்க்கரையுடன் சேர்த்து பவுடர் போல் அரைத்து பொடி செய்து கொள்ளவும்.
பின்னர் கடாயில் கேழ்வரகு மா, ஏலக்காய் பொடி என்பவற்றை சேர்த்து 5 நிமிடத்துக்கு மிதமான சூட்டில் வறுத்து வேறொரு பாத்திரத்துக்கு மாற்றிக் கொள்ளவும்.
அதற்கடுத்ததாக இதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக பிசைந்து கொள்ளவும்.
பின்னர் இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செய்து உப்புடன் உரலில் இடித்துக் கொள்ளவும்.
இடித்து வைத்துள்ள இஞ்சியை மா உள்ள பாத்திரத்தில் சேர்த்து, பேக்கிங் பவுடர் எண்ணெய் சேர்த்து கரைத்துக்கொள்ள பிஸ்கட் மா ரெடி.
இறுதியாக இதை பேக்கிங் ட்ரேயில் வேண்டிய வடிவத்தில் தட்டி வைக்கவும். பின்னர் பேக்கிங் ட்ரேயை 180 c வெப்பநிலையில் 8 நிமிடத்துக்கு வைத்து பேக் செய்து கொள்ளவும்.
அருமையான ராகி பிஸ்கட் ரெடி.
image - jobreetskitchen.com