நீரிழிவு நோயாளிகள் திடீரென்று எடையை குறைக்க இந்த ஒரே ஒரு உணவு போதும்.... 5 நிமிடத்தில் தயார்!
கேழ்வரகு உண்பதை வழக்கமாக வைத்துக் கொண்டால், ஊட்டச்சத்து குறைபாடுகள், சிதைவு நோய்கள் போன்ற பல நோய்கள் உடலை அணுகாதவாறு பார்த்துக் கொள்ளலாம்.
உடலைக் குளிர்ச்சியாக்கும். உடலுக்கு வலுவையும் தரும். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு அரு மருந்து. அரிசி சாதத்துக்குப் பதிலாக இந்தக் கூழைக் குடித்துவந்தால், விரைவாக எடை குறையும்.
கேழ்வரகில் உள்ள தாவர வகை இரசாயன கலவைகள் செரிமானத்தை குறைக்கின்றன.
இது நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் கேழ்வரகை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.
நீரிழிவு நோயாளிகள் எடையை குறைக்க கேழ்வரகு அவல் உப்புமா சாப்பிடலாம். 5 நிமிடத்தில் எப்படி தயாரிக்கலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கேழ்வரகு அவல் - ஒரு கப்
- வெங்காயம் - ஒன்று
- கடுகு - அரை டீஸ்பூன்
- உளுத்தம்பருப்பு
- கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
- காய்ந்த மிளகாய் - 2
- பெருங்காயத்தூள் - சிறிதளவு
- மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை க
- றிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு
- எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
செய்முறை
கேழ்வரகு அவலை நன்றாக சுத்தம் செய்து 15 நிமிடம் ஊற வைக்கவும். வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து, வதங்கவும். வதங்கியதும் கேழ்வரகு அவலை சேர்க்கவும்.
இதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கிளறி 10 நிமிடம் மூடி வைக்கவும்.
அடுப்பை ‘சிம்'மில் வைக்கவும். பிறகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.
சத்தான கேழ்வரகு அவல் உப்புமா ரெடி.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

5 நிமிடத்தில் பற்களின் மஞ்சள் கறையை போக்க வேண்டுமா? சூப்பரான டிப்ஸ் 4 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022