5 நாட்களில் ராதிகாவின் தாய்கிழவி செய்த அதிரடி வசூல் - இத்தனை கோடியா?
ராதிகா நடித்துள்ள தாய்கழவி திரைப்படம் இன்று ஐந்து நாட்களாகும் நிலையில் தற்போது அதன் விபரம் வெளியாகி உள்ளது.

தாய் கிழவி
தமிழ் சினிமாவில் தற்போது பல இயக்குனர்கள் களமிறங்கி உள்ளனர். ஒவ்வொருவருடைய கதை உருவாக்கமும் திரைப்படத்தின் அமைப்பும் அட்டகாசமாக ரசிகர்களை ஈர்த்து வருகின்றது.
அந்த வரிசையில் தாய் கிழவி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருக்கும் இயக்குனர் தான் சிவக்குமார் முருகேசன். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான தாய் கிழவி ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ளது.

படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படமும் நாளுக்கு நாள் வசூல் வேட்டையில் நல்ல கலெக்ஷன் செய்து வருகிறது.

பாக்ஸ் ஆபிஸ்
படம் முழுவதும் காமெடி காமெடியாக மக்களை கவர்ந்து வருகிறது, அதே நேரத்தில் பெண்கள் எவ்வளவு வலிமையாக இருக்க வேண்டும் என்ற கருத்தையும் இப்படம் மூலம் சமூகத்திற்கு இயக்குனர் கூறிஉள்ளார். ராதிகாவின் கெட்டப் பார்த்து ரசிகர்கள் குடும்பத்துடன் பார்த்து இந்த படத்தை மகிழ்கிறார்கள்.

இந்த நிலையில் இப்படம் 5 நாள் முடிவில் சுமார் ரூ. 29.5 கோடி வரை வசூல் செய்துள்ளது என தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. ஐந்து நாட்களிலே இப்படி என்றால் எதிர்வரும் நாட்களில் எப்படி வசூல் இருக்கும் என்பதை பொறித்திருந்து பார்க்கலாம்.