பாக்கியாவை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா? பழனிச்சாமியிடம் ராதிகா அதிரடி
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா பொருட்காட்சி ஆர்டரை பெற்றுள்ள ராதிகா சர்ப்ரைஸாக வந்து அதிர்ச்சி கொடுத்துள்ளதுடன், பழனிச்சாமியிடம் திருமணத்தை குறித்தும் பேசியுள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.
பாக்யாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்துள்ளார்.
கோபி தனது அம்மாவுடன் சேர்ந்து பாக்கியாவிற்கு நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், ராதிகா அவருக்கு சப்போர்ட் செய்து வருகின்றார்.
இந்நிலையில் பாக்கியா பொருட்காட்சியில் சமையல் ஆர்டரை வாங்கி பிரம்மாண்டமாக அழகு படுத்தி கடையை திறந்துள்ளார். இதற்கு ராதிகாவும் மாஸாக வந்து பாக்கியாவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
பழனிச்சாமி ராதிகாவிடம் சென்று பாக்கியா குறித்து பேசிக் கொண்டிருந்த நிலையில், சட்டென ராதிகா பாக்கியாவை திருமணம் செய்து கொள்ள கேட்டு அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.
இதனால் கதையின் போக்கு அடுத்து என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |