அடையாளமே தெரியாமல் மாறிப்போன ராதா மகள்- நடந்தது என்ன?
நடிகை ராதாவின் மகள் துளசி வாரியர் அடையாளம் தெரியாத அளவிற்கு உடற்பருமன் அதிகரித்து மிகவும் சோகமாக காட்சி அளிக்கிறார்.
துளசி நாயர்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் தான் நடிகை ராதா. இவருக்கு விக்னேஷ் நாயர் என்ற மகனும், கார்த்திகா நாயர் மற்றும் துளசி நாயர் என்று இரு மகள்கள் இருக்கின்றனர்.
இதில் கார்த்திகா நாயர் மற்றும் துளசி நாயர் இருவருமே சினிமாவில் நடித்துள்ளனர். துளசி நாயரும் கடல் மற்றும் யான் ஆகிய 2 படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் 2013 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் வெளியானவை.
இதன் பின்னர் துளசி நாயரை எந்த படங்களிலும் பார்க்க கிடைக்கவில்லை. இவர் நடித்த இந்த படங்களுக்கும் எந்த விதமான வரவேற்பும் இல்லாத காரணத்தினால் இவருக்கு பட வாய்ப்புக்ளும் குறைந்துள்ளது.

இதன் பின்னர் தன்னுடைய உடலை கவனிக்காமல் விட்டு இருக்கிறார் துளசி. துளசி இப்படி விட்ட நிலையில் உடல் பருமன் அதிகரித்து தற்போது அடையாளமே கண்டுபிடிக்க முடியாதவாறு மாறி உள்ளார்.
துளசி நாயரின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த நவம்பர் 27ஆம் தேதி நடிகை ராதாவின் அம்மா சரசம்மா அதாவது துளசி நாயரின் பாட்டி வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துள்ளார்.

அவரது மறைவில் தான் துளசி நாயர் கலந்து கொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் வைரலாகி வருகிறது. அதில் தான் உடல் எடையை கூடிய நிலையில் இருந்துள்ளார்.
அதில் வெள்ளை நிற ஆடையுடன் சோகமான தோற்றத்தில் இருந்துள்ளார். இந்த புகைப்படத்தை பகிர்ந்து ஒருவர் எவ்வளவு காசு பணம் இருந்தால் என்ன, ஹெல்த் விஷயத்தில் இவ்வளவு எப்படி இப்படி அஜாக்கிரதையாக இருப்பாங்க என்று யோசிக்க தோன்றுகிறது என்று பதிவிட்டுள்ளார்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |