நடிகை ராதா மருமகனின் சொத்து மதிப்பு என்ன? மகள் கார்த்திகாவிற்கு அடித்த கோடீஸ்வர யோகம்
நடிகை ராதா மகளின் கணவர் ரோகித்தின் சொத்து மதிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
நடிகை ராதா
1980-களில் தென்னிந்திய திரையுலகில், பல ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து முன்னணி நடிகையான வலம் வந்தவர் தான் நடிகை ராதா.
இவரது சகோதரி அம்பிகாவும், ராதாவும் சேர்ந்து பாரதிராஜா படமான அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தில் அறிமுகமாகினர்.
முதல் படமே வெற்றிப் படமாகியதால், பின்பு தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்து அசத்தினர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்த ராதா ஹொட்டல் தொழிலதிபரான ராஜசேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகினார்.
இந்த தம்பதிகளுக்கு கார்த்திகா, துளசி என்ற இரு மகளும் ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கார்த்திகாவிற்கு கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது.
மகளுக்கு தங்க இழையால் நெய்யப்பட்ட புடவை, அடுக்கடுக்காக கிலோ கணக்கில் தங்க நகைகள், நட்சத்திர ஹொட்டல் என சீர்வரிசை கொடுக்கப்பட்டுள்ளது.
கார்த்திகாவின் கணவர் சொத்து மதிப்பு
ரோஹித் மேனன் தொழிலதிபர் என்பதை தாண்டி அவரைப் பற்றிய பிற தகவல்கள் வெளியாகாத நிலையில், தற்போது ரோஹித் மேனனின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
துபாயில் முன்னணி இளம் தொழிலதிபராக இருக்கும் ரோஹித் மேனன், கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர் என்றாலும் துபாயில் தான் வளர்ந்துள்ளார்.
இவரின் சொத்து மதிப்பு 500 கோடிக்கு மேல் இருக்கும் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |