வீட்டில் விசேஷம்! மருதாணி கைகளுடன் ரட்சிதா வெளியிட்ட பதிவு
சீரியல் நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மி மருதாணி கைகளுடன் தனது வீட்ல விசேஷம் என குறிப்பிட்டு தற்போது வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைராலாகி வருகின்றது.
ரச்சிதா மகாலட்சுமி
சீரியலில் இருந்து சினிமாவுக்கு சென்ற நடிகைகளில் ஒருவர் தான்ரச்சிதா மகாலட்சுமி. இவர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார்.
சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த, தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கடந்த சில வருடங்களாக இவர்கள் இருவரும் கருத்து வேறுப்பாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
அதைனையடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 6இல் கலந்து கொண்டு பட்டிதொட்டியெல்லாம் பிரபல்யம் ஆனார்.
சிறப்பாக போட்டியில் விளையாடிய இவர் 91 நாட்கள் வரை வீட்டில் இருந்த இவர், எந்த சர்சையிலும் சிக்காமல் வெளியேறினார்.
தற்போது படங்களில் நடித்து வரும் ரச்சிதா, தமிழில் Fire படத்தில் நடித்திருந்தார்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
ரச்சிதா தனது கணவரை பிரிந்து, புது வீடு வாங்கி தனது அம்மா உடன் தனியாக வசித்து வருகின்றார் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் மருதாணி கைகளுடன் தனது வீட்ல விசேஷம் என குறிப்பிட்டு தற்போது வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருவதுடன், இவருக்கு திருமணமா என ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |