எருமை மாட்டுக்கு சேலை கட்டுன மாதிரி.. ஜனனிக்கு ரக்ஷிதாவின் கணவர் தினேஷ் தரமான பதிலடி!
மைனா மற்றும் ஜனனிக்கு ஓட்டு போடாதீர்கள் என்று ரச்சிதாவின் கணவர் தினேஷ் சமூகவலைத்தளத்தில் தெரிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக களமிறங்கியிருக்கும் இலங்கை ஜனனி ரச்சிதாவின் உடை பற்றி விமர்சித்து இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அதாவது, ”எருமை மாட்டிற்கு சேலை கட்டி விட்டது போல இருக்கு” என ஜனனி சொன்னது பலருக்கும் அதிர்ச்சி கொடுத்திருக்கிறது.
ரச்சிதாவின் கணவர் பதிலடி
இந்த நிலையில், ரச்சிதாவின் கணவர் தினேஷ், ஜனனிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
அவர் சமூக வலைத்தளத்தில் மைனா மற்றும் ஜனனிக்கு ஓட்டு போடாதீங்க என கூறி இருக்கிறார்.
இதேவேளை, ரச்சிதாவை பிரிந்து அவரின் கணவர் தினேஷ் இருந்தாலும், அவருக்கு ஆதரவாகவே பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றார்.
மிக விரைவில் இருவரும் ஒன்று சேர வேண்டும் என்று ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.