விஜய்க்குத் தான் என் வாக்கு என சிம்பாளிக்கா சொன்ன ரச்சிதா மகாலட்சுமி! வைரலாகும் காணொளி!
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் வாக்குபதவு வெகு சிறப்பாக நடைபெற்று வருகிற நிலையில், தன் ஓட்டு விஜய்க்கு தான் என்பதை சிம்பாளிக்காக சொல்லும் வகையில், நடிகை ரச்சிதா மகாலட்சுமி தற்போது வெளியிட்டுள்ள மாஸ் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ரச்சிதா மகாலட்சுமி
சீரியலில் இருந்து சினிமாவுக்கு சென்ற நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை ரச்சிதா மகாலட்சுமி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார்.

சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த, தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கடந்த சில வருடங்களாக இவர்கள் இருவரும் கருத்து வேறுப்பாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
புதிய வீடு வாங்கி அம்மாவுடன் குடியேறிய ரச்சிதா அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 6இல் கலந்து கொண்டார்.

தற்போது படங்களில் நடித்து வரும் ரச்சிதா, சினிமாவில் அறிமுகமாகிய பின்னர் அண்மை காலமாக தாராள கவர்ச்சி காட்டி சமூக ஊடகங்களிலும் புகைப்படங்களையும் காணொளிகளையும் வெளியிட்டு வருகின்றார்.
இந்நிலையில், ரச்சிதா மகாலட்சுமி வெள்ளை நிறச் சட்டை அணிந்து கொண்டும், வெளிர் காக்கி நிறத்தில் கார்கோ பேண்ட் அணிந்து கொண்டும் தான் எடுத்துக் கொண்ட காணொளியை பகிர்ந்துள்ளார். இவை ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக தேர்தலை எதிர் கொள்வதால், இளைஞர்கள் பலரும் அவலுடன் வாக்கு செலுத்தி வருகின்றனர்.
குறிப்பாக பலரும் விஜய் பிரசாரத்தில் அணிந்திருந்த வெள்ளைச் சட்டை மற்றும் வெளிர் காக்கி நிற பேண்ட் அணிந்து கொண்டு வாக்கு செலுத்துவதை பரவலாகவே பார்க்க முடிகிறது. இந்நிலையில் தான் விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பதை பறைசாபற்றும் வகையில் ரச்சிதா வெளியிட்டுள்ள காணொளி வைராலாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |