ஏன்டா சினிமாவுக்கு வந்தோம்.. நொந்துப்போன பார்த்திபன் : வெளியான தகவல் - ரசிகர்கள் ஷாக்
நடிகர் பார்த்திபன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரும், இயக்குநருமான ராதாகிருஷ்ணன் பார்த்திபன். புதிய பாதை படத்தின் மூலம் இயக்குநர் மற்றும் நடிகராக அறிமுகமானார்.
இவர் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இவர் இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படம் விருதுகளை வாங்கி குவித்தது. சமீபத்தில் இரவின் நிழல் என்ற படத்தையும் இயக்கியிருந்தார். படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்றார்.
நொந்து போன பார்த்திபன்
இந்நிலையில், சமீபத்தில் ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்த பார்த்திபன் பல சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில்,
அதாவது, நடிகர் பார்த்திபன் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காமல் சுற்றிக்கொண்டிருந்தார். இவருக்கு பாக்கியராஜ்தான் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கொடுத்தாராம். ‘புது கவிதை’ என்ற படத்தில் நடிகர் பார்த்திபனுக்கு வாய்ப்பு கிடைத்தது.
அப்படத்தில், ரஜினிகாந்துடன் ஐந்தாறு காட்சிகளில் பார்த்திபன் நடித்திருந்தார். இப்படம் எஸ்.பி முத்துராமன் இயக்கி 1982ம் ஆண்டு வெளிவந்தது. அதன் பின், இதற்கு பிறகு நாம் பெரும் நடிகர் ஆக போகிறோம்.
நாமும் சூப்பர் ஸ்டார் மாதிரி ஆகணும் என்று பார்த்திபன் ஆசைப்பட்டிருக்கிறார். படம் வெளியானபோது அவர் தம்பியை அழைத்து கொண்டு சினிமாவிற்கு சென்றார் பார்த்திபன்.
தம்பியை மட்டும் படத்தை பார்த்துவிட்டு வா... நான் படத்துக்கு வந்தா மக்கள் கூட்டம் கூடிடும். நீ போய் படத்தை பார்த்துட்டு நான் எப்படி நடிச்சிருக்கேன்னு சொல்லு என்று கூறியிருக்கிறார். படத்தை பார்த்துவிட்டு வந்த தம்பி, இந்த ஷோவில் நீ நடிச்ச சீன் எதுவும் இல்லை.
வேணும்னா அடுத்த ஷோவில் வந்து பார்க்கலாம் என்று பார்த்திபனிடம் கூறியிருக்கிறார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார் பார்த்திபன். அப்போதான் புரிந்தது இவர் நடித்த அனைத்து காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளது. அப்போது, சினிமா மீதே ஒரு வெறுப்பு வந்தது என்றார்.