5 தங்க பதக்கங்களை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த நடிகர் மாதவனின் மகன் - குவியும் வாழ்த்து
இந்தியாவிற்கு 5 தங்க பதக்கங்களை வென்று தந்து பெருமை சேர்த்துள்ளார் நடிகர் மாதவனின் மகன்.
நடிகர் மாதவன்
‘அலைபாயுதே’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் மாதவன். இவர் தமிழில் மட்டுமல்ல இந்தியாவின் பல மொழிகளிலும் தன் நடிப்பு திறமையால் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாகவும் வலம் வந்தார் மாதவன்.சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருந்து வருகிறார் மாதவன். சமூக ரீதியான கருத்துக்களை தன் இணையத்தின் மூலம் பகிர்ந்து வருகிறார்.
சாதனைப் படைத்த மகன்
மாதவனின் மகன் வேதாந்த். நீச்சலில் அதிக ஆர்வம் கொண்ட இவர் நீச்சல் போட்டியில் பல்வேறு பதக்கங்களை பெற்று வருகிறார். கடந்த ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற தேசிய ஜூனியர் நீச்சல் போட்டியில் வேதாந்த் 7 பதக்கங்களை வென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். மேலும், டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் சர்வதேச நீச்சல் போட்டி நடந்தது.
இப்போட்டியில் கலந்து கொண்ட வேதாந்த், நடைபெற்ற 1500 மீட்டர் பிரிவுக்கான நீச்சல் போட்டியில் அவர் வெள்ளி வென்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். இதனையடுத்து, 800 மீட்டர் பிரிவுக்கான நீச்சல் போட்டியில் வேதாந்த் தங்கப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.
இந்தியாவிற்கு பெருமை சேர்த்த வேதாந்த்
இந்நிலையில், மலேசியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் நடப்பு ஆண்டில் நடந்த மலேசியன் இன்விடேசனல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் கலந்து கொண்டார்.
இவர் இந்தியாவுக்கு 5 தங்க பதக்கங்களை வென்று தந்து நாட்டுக்கு பெருமை சேர்த்திருக்கிறார். இதன்படி 50 மீட்டர், 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் மற்றும் 1500 மீட்டர் ஆகிய பிரிவுகளில் தங்க பதக்கங்களை தட்டி சென்றிருக்கிறார். இதனால், சர்வதேச அளவில் புகழ் பெற்றவராக மாறியுள்ளார் வேதாந்த்.
இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் நடிகர் மாதவன் மகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அப்பதிவில்,
கடவுளின் கருணையாலும் மற்றும் உங்களுடைய நல்வாழ்த்துகளாலும் மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் வார இறுதியில் நடந்த 2023-ம் ஆண்டுக்கான மலேசியன் இன்விடேசனல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்ற வேதாந்த், இந்தியாவுக்காக (50 மீட்டர், 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் மற்றும் 1500 மீட்டர்) 5 தங்க பதக்கங்களை வென்றெடுத்து உள்ளார். மகிழ்ச்சி அடைந்தேன். நன்றிகள் என பதிவிட்டுள்ளார்.
தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த இந்திய மக்கள் வேதாந்த்திற்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.