சற்றுமுன் பிக்பாஸில் இருந்து அதிரடியாக வெளியேறிய போட்டியாளர்! இறுதியில் தப்பிய மைனா...இப்படி ஒரு ட்விஸ்டா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சற்றுமுன்னர் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் குயின்சி வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில், சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளுக்கான பிக் பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு சற்று முன்னர் நிறை வடைந்துள்ளது.
நாமினேசனில் ஏற்பட்ட ட்விஸ்ட்
இந்த வாரம் நாமினேசன் பட்டியலில், கதிரவன், ரக்ஷிதா, ஜனனி, மைனா தனலட்சுமி மற்றும் குயின்சி ஆகிய 6 போட்டியாளர்களின் பெயர் இடம்பெற்றிருந்தது.
நேற்று வரை பதிவான வாக்குகளின் அடிப்படையில் மைனா மற்றும் குயின்சி ஆகிய இருவருமே மிகவும் குறைவான வாக்குகளை பெற்றிருந்தனர்.
நொடியில் தப்பிய மைனா
இதனால், இந்த வாரம் டபுள் ஏவிக்ஷனுக்கு வாய்ப்புள்ளதாக சில தகவல் பரவியது. எனினும், தற்போது கிடைத்த தகவலின் படி இந்த வாரமும் வழக்கம் போல் ஒரே ஒரு போட்டியாளர் மட்டுமே வெளியேறியுள்ளார்.
மக்களின் வாக்குகள் அடிப்படையில் குயின்சி தான் மிகவும் குறைவாக வாக்குகளை பெற்று வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வைரலாகி வருகின்றது.