புத்தாண்டு ராசிபலன் 2022 - சனியால் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிக ராசிக்கு ஏற்பட போகும் அதிரடி மாற்றம்!
2022ஆம் புத்தாண்டு சனிக்கிழமை கேட்டை நட்சத்திரத்தில் பிறக்கிறது.
சனிபகவான் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு நுழைகிறார்.
ஜூலை 12ஆம் தேதி வரைக்கும் சனிபகவான் கும்ப ராசியில் பயணிப்பார். பின்னர் வக்ரகதியில் பின்னோக்கி செல்லும் சனிபகவான் மகர ராசியில் ஆறு மாத காலம் பயணிக்கிறார். பின்னர் நேர் கதியில் 2023ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி கும்ப ராசிக்கு மீண்டும் இடப்பெயர்ச்சியாகிறார்.
2025ஆம் ஆண்டு வரைக்கும் சனிபகவான் கும்ப ராசியில்தான் பயணம் செய்வார். இதனால் பலரின் வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் நிகழ போகின்றது.
நவ கிரகங்களின் சஞ்சாரப் பார்வை காரணமாக துலாம், விருச்சிகம், தனுசு, மகர ராசிகளில் பிறந்தவர்களுக்கு 2022ஆம் புத்தாண்டு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
சிம்மம்
2022ஆம் ஆண்டு அற்புதங்களை ஏற்படுத்தப்போகிறது. தொழில் வியாபாரத்தில் நிறைய நன்மைகள் நடைபெறும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். சிலர் புதிய தொழில் தொடங்க மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியைத் தரும். அதிக சுப பலன்களும், சுப விரைய செலவுகளையும் ஏற்படும். வியாழக்கிழமைகளில் ராகவேந்திரர் மடங்களுக்கு சென்று வணங்கி வரலாம் நன்மைகள் அதிகம் நடைபெறும்.
கன்னி
2022ஆம் ஆண்டு புதனின் ஆதிக்கத்தில் புத்தாண்டு பிறப்பதால் மன குழப்பங்கள் நீங்கி எண்ணங்கள் தெளிவடையும். பிடித்த வண்டி வாகனம் வாங்கலாம். உயர் கல்வி படிக்க முயற்சி செய்யலாம். படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. திருமணம் சுபகாரியம் கை கூடி வரும். உங்களுக்கு மதிப்பு மரியாதை கூடும் அங்கீகாரம் கிடைக்கப்போகிறது. சனிபகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டிற்கு வரப்போவதால் எதிரிகள் தொல்லை நீங்கும். கடன் பிரச்சினை முடிவுக்கு வரும்.
துலாம்
2022ஆம் ஆண்டு தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்வையிடுகிறார். நினைத்த காரியம் நிறைவேறும். அர்த்தாஷ்டம சனி முடிவுக்கு வரப்போகிறது சனி பகவான் ஐந்தாம் வீட்டிற்கு செல்லப்போவதால் சொந்த வீடு மனை வாங்கும் யோகம் வரப்போகிறது. தடைபட்ட சுப காரியங்கள் தடைகள் நீங்கி வெற்றிகரமாக நிறைவேறும். மாணவர்களுக்கு முன்னேற்றம் அதிகரிக்கும்.
விருச்சிகம்
இந்தப் புத்தாண்டு நிறைய யோகங்களைத் தரப்போகிறது. உடல்நிலை சார்ந்த பாதிப்புகள் வந்து நிங்கும். வேலை விசயமாக கணவன் மனைவி இடையே பிரிவு வர வாய்ப்பு உள்ளது. . சனி பகவான் அதிசாரமாக பெயர்ச்சியாகி நான்காம் வீடான கும்ப ராசியில் 55 நாட்கள் தங்கியிருப்பார். இந்த நாட்கள் மிக முக்கியமான நாட்கள். நிறைய நன்மைகள் நடைபெறும். ஆன்மீக பயணங்கள் செல்வீர்கள்.