“ஓ சொல்றியா மாமா… ஓஓ சொல்றியா மாமா… இதெல்லாம் ஒரு பாட்டா?” - பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி ஆவேசம்
“ஓ சொல்றியா மாமா… ஓஓ சொல்றியா மாமா… பாட்டு குறித்து பிரபல பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி கருத்து தெரிவித்துள்ளார்.
புஷ்பா திரைப்படம்
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு புஷ்பா திரைப்படம் வெளியானது. இப்படம் மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியிடப்பட்டது.
புஷ்பா திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் வெளியானது.
இப்படத்திற்கு எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கிறதோ, இல்லையோ, அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள நடிகை சமந்தா நடனமாடிய ஓ சொல்றியா மாமா… ஓஓ சொல்றியா மாமா… பாடல் பட்டித்தொட்டி எங்கும் ஒலித்து மாபெரும் வரவேற்பை பெற்றது.
இதெல்லாம் ஒரு பாட்டா?
இந்நிலையில், பழம்பெரும் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி, ‘உ சொல்றியா மாமா வெல்லாம் ஒரு பாடலா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், எனது ஆரம்ப காலத்தில் கோரஸ் பாடல்கள் பாடிதான் சினிமா வாழ்க்கை ஆரம்பமானது. இப்போது வரும் பாடல்கள் எனக்கு பிடிக்கவில்லை. சமீபத்தில் ‘உ சொல்றியா மாமா’ என்ற பாடலை கேட்டேன். அதெல்லாம் ஒரு பாடலா? ஆரம்பத்திலிருந்து கடைசி வரை ஒரே மாதிரி இருந்தது என்று பேசினார்.