சூரியன், புதன் சுக்கிரன் கூட்டணியால் இந்த 5 ராசிக்கும் காத்திருக்கும் விபரீத ராஜயோகம்! புரட்டாசி மாத ராசி பலன்
புரட்டாசி மாதம் நவகிரகங்கள் சில ராசிக்காரர்களுக்கு அற்புத பலன்களைத் தரப்போகின்றன.
செப்டம்பர் 18ஆம் தேதி புரட்டாசி மாதம் பிறக்கிறது.
அக்டோபர் 17 ஆம் தேதி வரைக்கும் புரட்டாசி மாதம் உள்ளது. கன்னி ராசியில் மூன்று கிரகங்களின் கூட்டணியால் சில ராசிக்காரர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வரலாம் அதை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளுங்கள் இந்த மாதத்தில் தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
தனுசு
கழுத்தை நெறிக்கும் கடனை அடைத்து நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். வழக்கறிஞர்கள் பெரிய சாதனை படைப்பார்கள். பட்டமங்கலம் சென்று வாருங்கள். தொட்டதெல்லாம் துலங்கும்.
மகரம்
வியாபாரத்தில் எதிர்கால நலனுக்காக பணத்தை சேமிப்பீங்க. குதர்க்கம்மா பேசுற உறவுகளை உதறி தள்ளுங்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். ஊழியர்கள் மேலதிகாரிகளின் பாராட்டால் உற்சாகமாக வேலை பார்ப்பார்கள்.
கும்பம்
வெளியூர் பயணங்களில் அலைச்சல்தான் . மணல் செங்கல் வியாபாரிகளுக்கு யோகமான மாதம். திருமண காரியங்கள் தடையில்லாமல் நடக்கும். அதற்கான பேச்சுவார்த்தைகள பெரியவங்க சமூகமாக முடிவுக்கு வரும். கொடுத்த கடன் வசூலாகி மன நிம்மதி உண்டாகும். ஒத்தக்கடை யோக நரசிம்மரை வழிபடுங்கள். ஆயுள் விருத்தியாகும்.
மீனம்
நீங்க எதிர்பார்க்காத நேரத்துல சகோதரர் உதவி செய்வாருங்க. உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு சிறப்பான பலன் கிடைக்கும். வேலை தேடி அலைந்தவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். அழகர் கோவில் கள்ளழகர் பெருமானை வழிபடுங்கள். தொழில் விருத்தி அடையும்.