ஹேம மாலினி என்று அழைக்கப்படும் பிரபல நடிகை மரணம்! அதிர்ச்சியில் திரையுலகினர்
பஞ்சாபி திரையுலகின் பழம்பெரும் நடிகையான ஹேம மாலினி என்று அழைக்கப்படும் நடிகை தல்ஜீத் கவுர் இன்று காலாமானார்.
நடிகை ஹேம மாலினி
பழம்பெரும் பஞ்சாபி நடிகையான தல்ஜீத் கவுர். 69 வயதாகும் இவர் ராய்கோட்டில் வசித்து வந்த இவர் சமீப நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை லுதியானாில் மரணமடைந்தார்.
பஞ்சாப் சினிமா உலகில் இவரை செல்லமாக ஹேம மாலினி என்று அழைக்கப்படும் நிலையில், இவர் முதல்வர் பகவத் மான் உடன் இணைந்து இந்தி மற்றம் பஞ்சாபி மொழி படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.
இவரது மறைவு செய்தியினை, நடிகர் நீரு பஜ்வா தனது பதிவில் வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.