கோயிலில் கிடைக்கும் புளியோதரை போல வீட்டிலும் செய்யலாம்: எப்படித் தெரியுமா?
பொதுவாக கோயில்களில் கிடைக்கும் உணவு என்பது தனி சுவைதான். என்னதான் நாமும் வீட்டில் அதே சுவையில் செய்யலாம் என்று பார்த்தாலும் ஏதாவது ஒரு சுவை இருக்கும்.
அப்படி கோயிலில் கிடைக்கும் புளியோதரைப் போல வீட்டிலும் செய்யலாம் அதற்கான ரெசிபி இதோ.
தேவையான பொருட்கள்
- கடலை பருப்பு - 1 மேசைக்கரண்டி
- உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
- மல்லி - 1 மேசைக்கரண்டி
- மிளகு - 1 மேசைக்கரண்டி
- வெந்தயம் - 1 மேசைக்கரண்டி
- காய்ந்த மிளகாய் - 7
- பெருங்காயத் தூள் - 1மேசைக்கரண்டி
- கடுகு - 1 மேசைக்கரண்டி
- நல்லெண்ணெய், கறிவேப்பிலை - தேவையான அளவு
- வேர்கடலை - 1 கப்
செய்முறை
முதலில் 1 தேக்கரண்டி கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பை மிதமான சூட்டில் வறுத்துக் கொள்ளவும்.
பின்னர் அதில் ஒரு தேக்கரண்டி மல்லி, மிளகு,அரை தேக்கரண்டி வெந்தயம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை மிதமான சூட்டில் வறுத்து அரை தேக்கரண்டி பெருங்காயத் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பிறகு வறுத்து எடுத்துக் கொண்ட பொருட்களை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் சேர்த்து அதில் கடுகு, பருப்பு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை, காய்ந்த மிளகாய், பெருங்காயத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள்.
பிறகு அதில் 1 கப் வேர்கடலை சேர்த்துக் கொள்ளவும்.
பின்னர் அதில் புளிக்கரைசல் தண்ணீரை சேர்த்துக் கொள்ளவும். அதன் பின் 15-20 நிமிடம் வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
பின்னர் ஒரு பதத்திற்கு வந்ததும் அதில் உப்பு சேர்த்து கொஞ்ச நேரம் கழித்து இறக்கறிக் கொள்ளுங்கள்.
பின்னர் எடுத்து வைத்துள்ள சாதத்தில் நீங்கள் செய்து புளி கலவையை சாதத்தோடு பிசைந்து சாப்பிட்டால் கோயில் டேஸ்ட் புளியோதரை கிடைக்கும்.