1 வயதிலேயே குக் வித் கோமாளி புகழின் மகள் செய்த கின்னஸ் சாதனை! குவியும் வாழ்த்துக்கள்
பிரபல டிவி நிகழ்ச்சி குக் வித் கோமாளியில் கோமாளியாக பிரபலமடைந்த புகழின் மகள் தற்போது 1 வயதே ஆன நிலையில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
கின்னஸ் சாதனை
கலக்க போவது யாரு, சிரிப்பு டா, அது இது எது போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் புகழ். பெண் வேஷம் போட்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளைத்தை உருவாக்கிய புகழ்தனது காமெடி மூலம் மக்களின் கவனத்தை பெற்றார்.
தற்போது இவரின் மகள் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அந்த வகையில் அதிக நேரம் Dumbbellஐ தூக்கிய குழந்தை என்ற சாதனை புகழின் மகளுக்கு கிடைத்துள்ளது.
இவரது மகளுக்கு தற்போது 11 மாதங்கள் 16 நாட்களே ஆன ரிதன்யா சுமார் 2 கிலோ எடையுள்ள டம்ப்பெல்லை இடைவிடாமல் 17 வினாடிகள் பிடித்து சர்வதேச சாதனை புத்தகத்தில் புதிய உலக சாதனை படைத்துள்ளார் என்று கின்னஸ் சாதனையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு இணையவாசிகள் மற்றும் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |