கோவில் யானைக்கு சுகரா? திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்த அதிர்ச்சி
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி தீடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படும் லட்சுமி இன்று காலை பாகனுடன் நடைப் பயிற்சி மேற்கொண்டுள்ளது.
கல்வே காலேஜ் அருகே நடைப் பயிற்சி சென்ற போது லட்சுமி யானை திடீரென மயங்கி விழுந்துள்ளது.
மயங்கி விழுந்து உயிரிழந்த லட்சுமி
பரிசோதனை செய்ததில் யானை உயிரிழந்ததாக கூறப்பட்டது. பக்தர்களின் செல்லபிள்ளையாக இருந்து வந்த லட்சுமி யானை உயிரிழந்தது கோவில் நிர்வாகத்தினர், பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, தனது 5 வயதில் புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலுக்கு இந்த யானை அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
சோகத்தில் பக்தர்கள்
தற்போது 32 வயதான லட்சுமி 26 ஆண்டுகளாக கோவிலின் ஒரு அங்கமாக இருந்து வந்தது.
இந்தநிலையில் யானை லட்சுமியின் திடீர் உயிரிழப்பு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் கதறலுடன் லட்சுமியின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.