தினமும் டீக்கடைக்காரரிடம் பால் ஏடு பெற்றுச் செல்லும் காக்கை - வியக்க வைக்கும் வீடியோ!
தினமும் டீக்கடைக்காரரிடம் பால் ஏடு பெற்றுச் செல்லும் காக்கையின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
டீக்கடைக்காரரிடம் பால் ஏடு பெற்றுச் செல்லும் காக்கை
சமூகவலைத்தளங்களில் தினமும் ஏதாவது வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி மக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தி விடும்.
அதேபோல சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், புதுச்சேரியில் டீக்கடைக்காரரிடம் தினமும் ஒரு காக்கை வருமாம். காக்கை வந்ததும் அந்த டீக்கடைக்காரர் காக்கைக்கு ஒரு கப்பில் பால் ஏடை எடுத்து கொடுத்தவுடன் அந்த காக்கை அதைப் பெற்றுக்கொண்டு சென்று சாப்பிடுமாம்.
தினமும் இந்த காக்கை அந்த டீக்கடைக்காரரிடம் வந்து பால் ஏடை பெற்றுச் செல்வதை அப்பகுதி மக்கள் மிகுந்த வியப்போடு பார்த்து வருகின்றனர்.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்ததும் நெட்டிசன்கள் சற்றே வியப்படைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
#புதுச்சேரியில் டீக்கடைக்காரரிடம் தினமும் பால் ஏடை கேட்டு பெற்று செல்லும் #காக்கை#crow pic.twitter.com/lLKBoylEXa
— RAMJI (@RAMJIupdates) May 18, 2023