வீட்டில் தோசை மா இல்லையா? அப்போ இந்த 2 பொருள் மட்டும் வைத்து தோசை சுடலாம்..
வழக்கமாக அநேகமான வீடுகளில் காலையுணவு தோசையாகவே இருக்கும்.
காலையுணவிற்கு தோசை சுட சுட வீட்டிலுள்ளவர்கள் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். அம்மாக்களும் அனைவரும் சாப்பிட்டு முடியவரை தோசை சுடுவதை பழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
சில சமயங்களில் காலையில் எழுந்து பார்க்கும் பொழுது வீட்டில் தோசை மாவ இல்லை என்று கவலையா? அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இந்த ரெசிபி உங்களுக்கு கைக் கொடுக்கும் தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.
வீட்டில் இருக்கும் புதினா மற்றும் கோதுமை மா இரண்டையும் வைத்து மொறுமொறுவென தோசை சுடலாம். இந்த புதினா தோசைக்கு தேங்காய் சட்னி பக்காவான சைடு டிஷ்ஷாக இருக்கும்.
அந்த வகையில், புதினா தோசை எவ்வாறு செய்யாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
* புதினா - 1 கைப்பிடி
* கொத்தமல்லி - சிறிது
* பச்சை மிளகாய் - 4
* இஞ்சி - 1 இன்ச்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* கோதுமை மாவு - 1 கப்
* சில்லி ப்ளேக்ஸ் - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - தேவையான அளவு
புதினா தோசை செய்வது எப்படி?
முதலில் மிக்சர் ஜாரில் புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம், உப்பு ஆகியவற்றுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மென்மையாக அரைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 1 கப் கோதுமை மாவை எடுத்து, அதனுடன் அரைத்து வைத்துள்ள புதினா கலவையை ஊற்றி, தோசை மா பதத்திற்கு தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும்.
அதில் சில்லி ப்ளேக்ஸை சேர்த்து நன்கு கலந்து விட்டு, நாண்ஸ்டிக் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், அதில் கலந்து வைத்துள்ள மாவை ஒரு கரண்டி எடுத்து ஊற்றி வேக விட்டு இறக்கினால் சூடான தோசை தயார்! விருப்பம் இருந்தாலும் நெயும் சேர்த்து செய்யலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |