லட்சக்கணக்கான வருமானத்தை யூடியூபர் மதன் என்ன செய்தார்? விசாரணையில் பகீர் தகவல்
யூடியூபர் பப்ஜி மதன் தனது யூடியூப் சேனல் மூலம் சம்பாதித்த பணத்தை பங்கு வர்த்தகத்தில், பிட்காயின் எனப்படும் கிரிப்டோகரென்ஸில் முதலீடு செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
யூடியூபில் ஆபாசமாக பேசி மாதம் 7 லட்சம் வரை சம்பாதித்த மதன் மீது 159 புகார் வந்துள்ளது. இவருடன் எதிர் தரப்பில் ஆபாசமாக பேசும் பெண் இவரது மனைவி என்று கூறப்படுகின்றது.
ஆன்லைன் விளையாட்டு மூலமாக சிறுவர், சிறுமிகளிடம் ஆபாசமாக பேசுவதாகவும் சிறுவர், சிறுமியரை மிரட்டி பணம் பறித்ததாகவும் யூடியூபர் மதன் மீது குற்றம்சாட்டப்பட்டது.
மத்திய சைபர் கிரைம் பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில், தலைமறைவாக இருக்கும் மதன் முன்ஜாமீன் கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
பப்ஜி மதனின் மனைவி கிருத்திகாவையும் அதிரடியாக பொலிசார் கைது செய்துள்ளனர். சேலத்திலிருந்து தற்போது சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதுமட்டுமின்றி மதனின் தந்தை மற்றும் சகோதரர்கள் இருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடைபெற்று வருகின்றது.
மேலும், மதனின் யூடியூப் சேனலை முடக்கி யூடியூப் நிறுவனத்திற்கு சைபர் கிரைம் பொலிசார் கடிதம் எழுதியுள்ளனர். மேலும், ஆபாசமாக பேசிய வீடியோக்கள் நீக்கப்பட்ட நிலையில், சேனலை நிரந்தரமாக முடக்கவும் சைபர் கிரைம் பொலிசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மதனின் இரண்டு உயர் ரக சொகுசு கார்களை தற்போது பறிமுதல் செய்ய மத்திய குற்றப்பிரிவு பொலிசார் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், மதன் தனது யூடியூப் சேனல் மூலம் சம்பாதித்த பணத்தை பங்கு வர்த்தகத்தில், பிட்காயின் எனப்படும் கிரிப்டோகரென்ஸில் முதலீடு செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.