பிரபல தயாரிப்பாளர் எடுத்த விபரீத முடிவு... அடையாறு ஆற்றிலிருந்து எடுக்கப்பட்ட உடல்
தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
தயாரிப்பாளர் கே. ராஜன்
தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும், நடிகராகவும் வலம்வந்தவர் தான் கே. ராஜன். இவர் பிரம்மச்சாரிகள் படத்தின் மூலம் 1983ம் ஆண்டு தயாரிப்பாளராக களமிறங்கினார்.
பின்பு பல படங்களை தயாரித்ததுடன், சில படங்களையும் இயக்கியுள்ளார். மேலும் தங்கமான தங்கச்சி உட்பட சில படங்களுக்கு கதாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

சில திரைப்படங்களில் நடிக்கவும் செய்துள்ளார். இவர் இன்று சென்னை அடையாறு ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
தீயணைப்பு துறையினர் இவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவர் சில நாட்களாக மனஉளைச்சலில் இருந்ததாகவும், இந்நிலையில் இப்படியொரு தவறான முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதுகுறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ள இந்த சம்பவம் திரையுலகினரை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் தயாரிப்பாளர் கே. ராஜனின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |