சரியான தூக்கம் இல்லையா? இந்த பாதிப்புகள் ஏற்படுமாம்
தினமும் சரியான தூக்கம் இல்லாவிட்டால் என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தூக்கமின்மை
தூக்கமின்மை பிரச்சினை கவனம் செலுத்துவதற்கும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கும், தகவல்களை நினைவில் வைத்திருப்பதற்கும் கடினமாக்கும்.
எரிச்சல், மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்ற மனநிலை மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.
தீர்ப்பாற்றல் மற்றும் முடிவெடுக்கும் திறனை பாதிப்பதுடன், ஆபத்தான மற்றும் தவறான முடிவுகளுக்கு வழிவகுக்கும்.
தூக்கமின்மை விளையாட்டு செயல்திறன் மற்றும் உடல் சகிப்புத்தன்மையை குறைப்பதுடன், நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தி, சளி மற்றும் பிற தொற்று நோய்களுக்கு வழிவகுக்கும்.
உடல் பருமன் மற்றும் டைப் 2 நீரிழிவு நோய் ஆபாயத்தை அதிகரிப்பதுடன், இதய நோய், பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம் இவற்றிற்கும் வழிவகுக்கும்.
தூக்கமின்மை மனச்சோர்வு மற்றும் பதட்ட நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும்.
சில ஆய்வுகள் தூக்கமின்மை சில வகையான புற்றுநோய்க்கான அபாயத்தை அதிகரிக்கலாம் என்று கூறுகின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |